கணிதவியலாளராக சாதனை படைத்த இந்தியர்
மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மன கணக்கீட்டு உலக சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியர் நீலகண்ட பானு பிரகாஷ் தங்கப்பதக்கம் வென்றார்.
கணிதப்பாடம் ஒரு கலை என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த போது கூறினார். எல்லோரையும் போல தானும் ஒரு சாதாரண மாணவன். அது தான் நிஜம்.
எல்லோராலும் வேகமாக கணக்கிட முடியும். இது நாடு, உலகம் என அனைவருக்கும் பொருந்தும். கணிதப் பாடம் முடிந்தவரை விரைவாக கணக்கிட்டு சொல்ல வேண்டும். விளையாட்டைப் போலவே இதிலும் குறிப்பிட்ட மெதொடாலஜி கடைபிடிக்கப்படுகின்றன.
நம் மூளைக்குள் விளையாடப்படும் ஸ்பிரின்டிங். எப்படி தடகள விளையாட்டுகளில் ஸ்பிரிண்டிங் ஒருவகையான விளையாட்டு என்பது உங்களுக்கு தெரியும். இதுபோன்று தான் மன கணக்கீடும்.
பள்ளிப் பாடத்தில் கணக்குப் பாடத்தை ஒருவித பய உணர்வோடு நெருங்குவதால் தான் கணிதம் என்றாலே ஓட்டம் எடுக்க காரணமாக அமைகிறது.
தன் பயணத்தில் தான் கணிதத்தில் சிறந்தவனாக இருக்கிறேன், இருந்தேன். கணிதம் கலை வடிவமாக அணுகியதால் தன்னால் ஆகச்சிறந்த சாதனையை படைக்க முடிந்தது.
இன்று இது சமூகத்திற்காக தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுக்கக்கூடிய தொடக்கம் என்று பார்க்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.