ஃபேசன்வாழ்க்கை முறை

பட்டுகளுக்கு ஏற்ற பிளவுஸ் தேர்வு செய்யணுமா?

பெண்கள் விரும்பும் ஆடைகளில் தனித்துவமானது பட்டுப்புடவை. மற்ற புடவைகள் எத்தனை புதிதாக வந்தாலும், பட்டுப்புடவை கென்று தனி வரவேற்பு உள்ளன. பல நிறத்திலும், பல்வேறு வடிவங்களிலும், பல ரகங்களை கொண்டது பட்டுப்புடவை. ஒவ்வொரு முறை பட்டு புடவை எடுக்கும் போது அதற்கேற்ற ப்ளவுஸ் தேர்வு செய்வது மிக அவசியம்.

பட்டுப் புடவைக்கு அழகு சேர்ப்பது

பெண்கள் அணியும் பட்டுப் புடவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் நல்லதொரு தோற்றத்தையும் தருவதாக அமைய வேண்டுமென்றால் அதற்கேற்ற மேட்சிங் ப்ளவுஸ், தேர்வு செய்ய அதிக கவனம் செலுத்த வேண்டும். பட்டுப் புடவைகள் பல ரகங்களிலும், பலவகைகளிலும் பட்டு பிளவுஸ்கள் பல கடைகளில் கிடைக்கிறது. சிறந்த ஒன்றை தங்களுக்கேற்ற பிளவுஸ் தேர்ந்தெடுக்கும்போது என்னென்ன டிப்ஸ்களை கையாளலாம் என்று பார்க்கலாம்.

முதலில் பட்டுப் புடவையில் உள்ள டிசைனுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யலாம். பட்டுப்புடவையின் நிறமும், பிளவுஸின் நிறமும் ஏற்றதாக இருக்கலாமே தவிர மாறுபட்ட கலரை தேர்ந்தெடுக்கக் கூடாது. எளிமையாக அல்லது ஆடம்பரமாக இருக்கவேண்டுமா என்பதை தீர்மானம் செய்துவிட்டு பிளவுசை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நவீனமான டிசைன்கள் முதல் பாரம்பரிய டிசைன்கள் வரை

கைகளால் வேலைப்பாடுகளை செய்துள்ள பிளவுஸ் தேர்வு செய்வதால் பட்டுப் புடவைக்கு ஏற்றதாக இருக்கும். நவீனமான டிசைன்கள் முதல் பாரம்பரிய டிசைன்கள் வரை, பிளவுஸ் டிசைன் பட்டுப்புடவைக்கு தேர்வு செய்யலாம். நீங்களாகவே இதை வடிவமைக்க முடியும். சில சமயங்களில் எம்ராய்டரி செய்துள்ள பிளவுஸ் அணியும்போது அசவுகரியமாக உணரலாம். இதனால் எம்ராய்டரி குறைந்த அளவு வேலைப்பாடு இருக்கும் பிளவுஸ் தேர்ந்தெடுக்கலாம்.

பிளவுஸ் வடிவமைப்பு

குண்டாக இருப்பவர்கள் பிளவுஸ் பின் ஓரங்களில் பட்டை பைப்பிங் மற்றும் கழுத்து வடிவமைப்பு நன்கு விரிந்தவாறு கொடுப்பதால் அழகாக இருக்கும். சற்று உடல் ஒல்லியாக இருப்பவர்கள் கழுத்து விரிந்த வடிவமைப்பையும் மெல்லிய ஸ்டிராப், நீண்ட கைகள் கொண்ட அமைப்பை வடிவமைக்கலாம். கையில்லாத பிளவுசை தடிமனான கைகளை உடையவர்கள் அணியக்கூடாது.

கைகள் நீளமாக உடையவர்கள் கையின் நீளத்தை முழு அல்லது முக்கால் அளவிற்கு வைத்த பிளவுஸ்களை அணியலாம். நீளமான பிளவுசை அணிவதால் தொப்பை தெரியாமல் அழகான தோற்றத்தை பெறலாம். ரெடிமேட் அல்லது அளவெடுத்து தைக்கும் பிளவுஸ் எது என்பதை முன்னரே தீர்மானிக்க வேண்டும். சவுகரியமாக இருக்கக்கூடிய பிளவுஸ் அணியும்போது ஃபிட்டாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *