சினிமா

ஜகமே தந்திரம் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது!

ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான படம் ஜகமே தந்திரம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.    

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகும் என்றும் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன, ஜோஜோ ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.  

 சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மோஷன் போஸ்டரில் இந்த படத்தில் வில்லன்கள் மற்றும் தனுஷ் ஒவ்வொருவராக தெரிகின்றனர். தனுஷ் தனது முதுகில் நீண்ட துப்பாக்கியும் கைகளில் இரண்டு துப்பாக்கியும் வைத்துக்கொண்டு சுட்டுக் கொண்டே இருக்கிறார். மற்றும் தனுஷுடன் முப்பதுக்கும் மேற்பட்ட அடியாட்கள் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும்பொழுது தனுஷ் இந்த படத்தில் ரவுடியாக நடிப்பார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நன்றி!

One thought on “ஜகமே தந்திரம் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *