அதிரடி நாயகன் இறந்தும் நம்மை ஆளும் மரண மாஸ் ஹீரோ புருஸ்லீ
எனது ஆஸ்தான நாயகன் வாழ்வில் என்றும் மறக்க முடியாத மாயம் என்று அவரைக் கூறலாம். மரண மாஸ் நடிகர் இறந்து 47 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் மாசு தான் ஆளு ரொம்ப பேசு தான். அதிரடியான அடிதடி, அனைவரையும் ஈர்க்கும் வேகம், கண்ணிமைக்கும் நேரத்தில் பஞ்ச் கொடுக்கும் யுக்தி, இது தான் மரண மாஸ் ஹீரோ புரூஸ்லீயின் வீரம் ஆகும்.
ஜூலை 20, 1973 ஆம் ஆண்டு மரண மாஸ் ஹீரோ புரூஸ் லீ இறந்த தினம். அதிவேகம் நின்ற தினம் நம்மையெல்லாம் அசந்து பார்க்கவைக்கும் தினம். இன்று யார் செய்த உத்தியோ, சக்தியோ தெரியவில்லை. ஆனால் ஒருபெரும் வீரம் வீழ்ந்தது. இன்னும் அந்த கதை விளங்காததாக இருக்கின்றது.
32 வயதில் ஒரு வீரரின் சகாப்தம் முடிந்துவிட்டது. கேள்விகள் பல தேடலுடன் இருந்த ஒரு ஆஸ்தான நாயகன் புரூஸ்லீயின் அஸ்தமனம் அன்று தான் நடந்தது. வெறும் நான்கு படங்கள் நடித்து நம்மை எல்லாம் இன்னும் ஆட்டுவிக்கும் ஆளுமை கொண்ட அபார சக்தி கொண்ட அந்த மார்செல் ஆர்ட் மன்னனை, நான் என்றும் மறக்க முடியாது.
தத்துவ நாயகன், அவர் நமது அபிமானி என்றும் சொல்லலாம். ஓரிரு நாடுகள் அல்ல உலகமே புரூஸ்லி என்றால் வியந்து நின்றது. தலைவர் ஒரு 10 வருடம் வாழ்ந்து இருந்தால்கூட இன்னும் பலநூறு வருடங்கள் அவரைப்பற்றி பேசியிருப்போம். அற்பமாக 32 வயதில் முடிந்துபோனது இமாலய சகாப்தம். என்ன செய்வதென்று இன்னும் விடை கிடைக்கவில்லை.
அதற்குப்பிறகு வந்த அடிதடி நாயகர்கள் யாரானாலும் புரூஸ்லியை நெருங்க முடியவில்லை. தில்லான நாயகன், கல்லு போன்ற தேகம், கரைக்க முடியாத இரும்பு போன்ற வலிமை, காற்றைப் போன்ற வேகம் கட்டுக்குள் இருக்கும் தேகம் என பல வித்தைகளை தன்னுள் கொண்டிருந்தவர். இந்த நாயகன் புரூஸ்லி அவர் பலருக்கு அவர் நாயகன் மட்டுமல்ல வழிகாட்டி ஆவார்.
நான்கு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அதில் 4000 வித்தைகள் காட்டி இருப்பார். கலக்கல் மன்னன் தி கேம் ஆப் தி டெத் உருவாகிக் கொண்டிருக்கும் போதே மண்ணுக்கு உரம் ஆனார். புரூஸ் லீ நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உனது ஒவ்வொரு தசைகளும் எங்கள் வாழ்வை ஆரோக்கியம் பற்றி வழி நடத்துகின்றது. எத்தனையோ சர்ச்சைகளை கடந்து வந்தாய், எத்தனையோ சதிகளைத் தாண்டி வந்தாய், இறுதியில் விதி முடிந்து சென்றாய்..
நீ என்றுமே ஆஸ்தான நாயகன் எங்களுக்கான ஊட்டச்சத்து உனது தத்துவங்களில் இருக்கின்றது. அதைக் கேட்கும் போதெல்லாம் நாடி நரம்புகள் எல்லாம் துடிதுடிக்கின்றது. வேகமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கின்றது. உனது திரைப்படம் பார்க்கும் போதெல்லாம் உன்னை மறக்காமல், ஆழ்மனம் தவிக்கின்றது.
யார் இந்த மனிதர் ஏனிந்த முடிவு என்ற கேள்விகள் ஆயிரம் என்னை துளை எடுக்கின்றன. நீ வாழும் துறவியாக இருந்தாய் பல வழிகளை கற்றுக் கொடுத்தாய் உன்னை மறக்க மாட்டேன். நீ இறந்த பின் தான் பிறந்தேன் ஆனால் உன் மீது இருக்கின்ற ஈர்ப்பு இன்னும் எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் குறையாது.
நீ அஸ்தமித்து விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை எங்கள் அதிரடி ரசனைகள் ஒவ்வொன்றும் உனக்கு கொடுக்கப்படும் இடத்தில் இருக்கின்றது. உனது ஆத்மா நிச்சயம் அமைதியுடன் இருக்கும். அதற்கு நன்றியுடன் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது ஒவ்வொரு அதிரடி ரசனைகள் ஒவ்வொன்றிலும் நீ இருக்கின்றாய். நீயே எங்களை ஆட்சி செய்கின்றாய். நீ இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய். புரூஸ்லீயின் ஆஸ்தான நாயகர் புரூஸ்லீக்கு அவர் இறந்து 20 வருடங்களுக்கு பிறகு பிறந்த ஒரு ரசிகையின் வரிகள் தான் அது. இன்றும் புரூஸ் லீ அந்த ரசிகை பொறுத்தவரை வாழ்ந்து கொண்டிருக்கின்றார். கேட்கவே பிரம்மிக்கின்றது. புருஸ்லிக்கு சமர்பணம்…