பட்டையைக் கிளப்பும் வரலக்ஷ்மி சரத்குமார்
திரையுலகமே இணையதளங்களில் செம ஆக்டிவா இருக்காங்க. வரலக்ஷ்மி சரத்குமார் இணையதளம் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் செம ஆக்டிவா வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
வேலை தேடி நாடோடிகளாக சென்னைக்கு வந்த பல பேருக்கு போலீஸ் அதிகாரிகளும் அரசாங்கமும் சேர்ந்து அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வரலக்ஷ்மி சரத்குமார் அந்த மக்களுக்கு தண்ணீர் மற்றும் சாப்பாட்டு உதவி செய்கிறார். அந்த வீடியோவும் இவரோட ரசிகர்களுக்காக தன்னோட இன்ஸ்டாகிராமில வெளியிட்டு இருக்காங்க.
டேனி
வரலக்ஷ்மி சரத்குமார் போலீஸ் அதிகாரியை சமஷ்டிக் ஆபீஸரா களம் இறங்குற படம் டேனி. ஜூலை 7ஆம் தேதி மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டேனி படத்தோட டிரைலரை வெளியிட்டார். அந்த சமயத்துல ஜீ5 தளத்துல இந்த படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீஸாகுதுனும் தெரிவித்து இருந்தனர் அந்த படக்குழுவினர்.
1 ஆகஸ்ட் 2020க்கு இன்னும் பத்து நாளு இருக்கிற இந்த சமயத்துல அந்தப் படத்தோட பிரமோஷன் ஆரம்பிச்சிருக்காங்க. வீட்டிலிருந்து ப்ரோமோட் பண்றது ரொம்ப ஜாலியா இருக்கு என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேச்சில வரலட்சுமி சரத்குமார் புகைப்படங்களேட சந்தோஷமா வெளியிட்டு இருக்காங்க.
என்ன மக்களே ஜீ5 சந்தா கட்டிடிங்களா!

லைஃப் ஆஃப் பை
டானி படத்தோட வெளியீட்டுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்க சந்தோஷம் ஒருபக்கம் இருக்க இவங்களோட சின்ன வயசுல இருந்து இருக்கிறார் பேக்கிங்கு நன்றி போட்டு லைஃப் ஆஃப் பை என்ற பெயரில் சிறு தொழில் ஆரம்பித்துள்ளார் என்பதை அண்மையில் பார்த்தோம்.
அவங்க வாழ்கின்ற ஊரான சென்னையில மட்டுமே இந்த பேக்கரியோட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. ‘சிஸ் டார்ட்ஸ்’ என்னும் பதார்த்தத்தை முக்கியத்துவமாக செய்கிறது இந்த பேக்கரி. இன்று பல டெலிவரிகள் காத்திருக்கிறது என்று சேர் செய்த வரலக்ஷ்மி சரத்குமார் விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். திங்கட்கிழமை அதுவுமா வாரத்தோட முதல் நாளிலேயே சுறுசுறுப்பாக இயங்கி பல டெலிவரிகள் காத்திருக்கிறது. என்று சேர் செய்த வரலக்ஷ்மி சரத்குமார் விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுவையான சீஸ் டார்ட்ஸ்சை பார்த்து ரசியுங்கள்.