அதிக விலைக்கு மாஸ்க்கு விற்பனை தவிர்க்க அரசு முடிவு
ஊரடங்கு காரணமாக நாட்டில் மாஸ்க் விற்பனை படு பேசாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் நாடு முழுவதும் மாஸ்க் அணிவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். மாஸ்க் தேவை நாட்டில் பட்டிதொட்டியெல்லாம் இருக்கின்றது. தேவையைப் பொருத்து அதன் பற்றாக்குறையும் வியாபாரிகளால் உருவாக்கப்படுகின்றது. இதனால் அதிக விலைக்கு மாஸ்க் விற்பனை ஜோராக இருக்கின்றது.
மத்திய அரசு கவனித்து முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்பது அனுமதிக்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் விதிமுறைகளை சட்டமாகக் கொண்டு வரும் என்ற தகவல்களும் கிடைக்கின்றன. ஊரடங்கு நேரத்தில் கவசம் அணிந்து வெளியில் செல்வது பாதுகாப்பை அதிகரிக்கும், என்ற நோக்கில் பட்டி தொட்டிகளில் இருந்து மெட்ரோ சிட்டி வரை மக்கள் முக கவசம் அணிந்து கொள்கின்றனர். இதில் பல ரகங்கள் வந்தவண்ணம் உள்ளன.
காற்று மாசு தவிர்ப்பு, சுத்திகரிப்பு காற்று சுத்தப்படுத்துதல் பலவண்ண மாஸ்க்குகள், மருத்துவ மாஸ்க்குகள் போன்றவை அனைத்தும் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விற்பனை நாட்டு மக்களுக்கு தேவையும் அதிகரிக்கின்றது.
ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 முதல் 5 முகக் கவசங்கள் வைத்திருக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் அவசியமாக கருதுகின்றனர். இனிவரும் காலங்களில் வொர்க் ப்ரம் ஹோம் முடிவுக்கு வரும் அலுவலகத்திற்கு செல்ல நேரலாம். ஆதலால் முடிந்தவரை ஊரடங்கு காலத்தில் கையிருப்பு இருக்க வேண்டியது இருக்கு அவசியமென்று மக்கள் இதனை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப முக கவசம் வாங்கி பயன்படுத்த வருதல் என்பது சிறப்பு தரும். அதே நேரத்தில் இதில் வியாபாரம் நோக்கத்துடன் அதிக விலைக்கு விற்பதை ஏற்க முடியாது இதுகுறித்து விரைவில் அரசு அறிவிப்பை வெளியிடும்.
நல்ல தரமான காட்டன் மாஸ்க்குகள் கடைகளில் கிடைக்கின்றன. அதன் விலையும் அதன் தரத்திற்கு ஏற்ப உள்ளது வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் இந்த மாஸ்க்குகள் வாங்கிப் பயன்படுத்துங்கள் போதுமானது ஆகும். தேவையற்ற மருத்துவ பெயர்கள் வைத்து அதனை விற்பனைக்கு ஏற்ப மாற்றித்தருதல் நம்மை முட்டாள் ஆக்கும் யுக்திகள் ஆகும்.