செய்திகள்தமிழகம்

மாஸ்க் அவசியம் அணிய வேண்டும். மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாமே..

மக்களுக்கு பாதுகாப்பு என்றால் என்.95 மாஸ்க் தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. சிலர் அதிக விலைக்கு மாஸ்க்குகளை விற்று வருகின்றனர். இதை அரசு கவனிக்க வேண்டும். ஒரு மாஸ்க்கை 8 மணி நேரம் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டி உள்ளது.

முக கவசங்களை வாங்க கூடுதலாக செலவாகிறது. அரசு இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவதால் மக்கள் தாராளமாக முகக் கவசங்கள் அணிந்து வெளியே வருவார்கள். கடந்த வாரத்தில் முக கவசம் அணிந்து வராதவர்களிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் சென்னையில் மட்டும் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் மக்களிடம் அச்சமின்மை அல்லது அறியாமை என்ற கேள்வி எழுந்துள்ளன. இதன்படி முகக்கவசம் அணிய தவறினால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 அபராதம். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம்.

தனிமைப்படுத்துதல் விதிகளை மீறும் நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம். சலூன்கள், ஜிம்கள், வணிக அமைப்புகள் உள்ளிட்டவற்றின் நடைமுறைகளை மீறினால் 5000 ரூபாய் அபராதம்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறும் தனிநபர்களுக்கு 500 ரூபாய் அபராதம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் வரும் வாகனங்கள் வணிக வளாகங்களுக்கு 5000 ரூபாய் அபராதம் என்று சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *