சினிமாசின்னத்திரை

பிக் பாஸ் வனிதாவிற்கு மீண்டும் திருமணமா..!!

பிக் பாஸ் வனிதாவிற்கு மீண்டும் திருமணம்

என்னது மறுபடியும் முதல்லேர்ந்தா!

பிக் பாஸ் சீசன் 3 மூலம் சமீபத்தில் மீண்டும் பிரபலமான வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திருப்பம். சந்திரலேகா படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர்‌. இளைய தளபதி விஜயுடன் வனிதா விஜயகுமார் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். வனிதா விஜயகுமாரின் தமையன் அருண் விஜய். திரையுலக பின்னணி இருந்தாலும் பிரதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

முதல் திருமணம் முடிந்து ஒரு மகளும் ஒரு மகனும் இருக்க இரண்டாவது திருமணமாகி மீண்டும் ஒரு மகள் பிறக்க தற்பொழுது ஒரு மகனும் இரு மகள்களுடனும் தனித்து வாழ்கிறார் வனிதா விஜயகுமார். குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் சர்ச்சைகள் நடந்து சிங்கிள் மதராக மூன்று பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.

வனிதா விஜயகுமார் இந்த வாழ்க்கையை மேற்கொண்டதற்கு விஜயகுமாரும் குடும்பத்தினரும் இவருக்கு ஆதரவாக இல்லை. வனிதா விஜயகுமார் மூன்று குழந்தைகளும் தனி வீட்டில் வாழ்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் பலர்  தனிமையின் இன்மை கண்டாலும் சிலருக்கு தனிமை சாபமாக அமைகிறது. வனிதா விஜயகுமாருக்கு துணையின் அவசியம் இந்த தனிமைக் காலத்தில் புரிந்துள்ளது. வாழ்க்கையில் வெறுமை, உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கம் என அனைத்தும் மனம் துணையை நாட அதற்கு ஏற்றவாறு கனவு நாயகன் வனிதா விஜயகுமார் அமைந்துள்ளார்.

வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் ஒன்றான யூ டியூப் சேனலில் சில தொழில்நுட்ப கோளாறுக்காக உதவி புரிந்தவர் பீட்டர் பால். பிக்பாஸ் இருக்கு பிறகு குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் வந்த வனிதா விஜயகுமார் ஊரடங்கு நேரத்தில் சமையல் குறிப்புகளை எடுத்து தனது யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்வது வேலையாக இருந்த பொழுது அதிற்கு உதவி புரிந்தவர் தொழில்முறைக் இயக்குனரான பீட்டர் பால்.

பீட்டர் பால் என்பவர் நண்பராக அறிமுகமாகி பின் காதலிப்பதாக சொல்ல வனிதா விஜயகுமாரின் மனம் அதற்கு ஆசைப்பட்டாலும் தன் பிள்ளைகளிடம் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.

பீட்டர் பாலும் நேரம் தள்ளாமல் உடனடியாக பிள்ளைகளிடமும் கையோடு கேட்க மூவரும் உற்சாகத்தில் ஒரே குரலோடு எஸ் என்று கத்தியுள்ளனர். பீட்டர் பாலுடன் வனிதா விஜயகுமாருக்கு மூன்றாவது திருமணம் நடைபெற போகிறது.

க்ரீன் சிக்னல் வாங்கின கையுடன் திருமண தேதியும் குறித்து உற்றார் உறவினருடன் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு டும் டும் டும் நடைபெறப் போகிறது.

வனிதா விஜயகுமாரின் ரசிகர்கள் புகைப்படம் மற்றும் காணொளிக்காக காத்திருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *