ஜூனியர் குஷ்புவிற்கு திருமணமா? இல்லையா!
ஜூனியர் குஷ்புவாக கருதப்படும் ஹன்சிகா மோட்வானி 2011இல் மாப்பிள்ளை என்னும் தனுஷ் படத்தில் அறிமுகமாகி பெரும்பாலான முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இளைய தளபதி விஜய், ஜெயம் ரவி, ஆர்யா, சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த படம் மற்றும் பல நடிகர்கள் கொண்ட அரண்மனை திரைப்படம் குறிப்பிடத்தக்கவை. அரண்மனை படத்தில் அமானுஷ்யமாக கலக்கியுள்ளார்.
ஜெனிலியாவுக்கு பின்பு சுட்டி தனமாக திரையுலகிற்கு நுழைந்துள்ளார் என்று அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டும் வண்ணம் ஹன்சிகா மோட்வானி இறங்கினார். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாமலேயே அவரின் பவுசு இறங்கிவிட்டது.
மகா, பார்ட்னர் போன்ற படங்கள் தற்போது பட்டியலில் இருக்கிறது. தற்போது ஹன்சிகா மோட்வானிக்கு மார்க்கெட் இல்லை என்பதே நிதர்சனம்.
சும்மா இருக்கவங்களை எப்படி சும்மா விடுவாங்க நம்மாளுங்க…
ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் கோவில்களிலும் வீடுகளிலும் சாதாரணமாக திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹன்சிகா மோட்வானியும் பெரிய தொழில் அதிபர் ஒருவரை இரண்டு நாட்களில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி சர்ச்சையாக கிளம்பியது.
அந்த செய்திக்கு (Rubbish who is he?) யார் அவர் என்று ஆங்கிலத்தில் சமூக வலைத்தளத்தில் கேட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக ஹன்சிகா மோட்வானியின் நண்பர் ஒருவர் (oh my God! why haven’t you told me yet?) ஏன் இன்னும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று கேட்டுள்ளார்.
எனக்கே இந்த செய்தி இப்பொழுது தான் தெரிந்தது நான் எப்படி உனக்கு முன்னால் கூறுவது? என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஒருவரையும் விடுவதில்லை போலிருக்கிறது.
மொத்தத்தில் ஹன்சிகாவுக்கு கல்யாணம் இல்லை. ஹன்சிகாவை காதலிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் இதுவே நற்செய்தி.