புதுமை திருப்பூர் நடமாடும் திருமண மண்டபம்
நாட்டிலேயே முதல் முறையாக நடமாடும் திருமணமஹால் வாகனம் உடுமலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை செய்தவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்கார மேடைகள் அமைத்து தரும் தொழில் செய்து வருபவர் ஹக்கீம்.
கடந்த நான்கு மாதங்களாக திருமண மண்டபங்களும், கோயில்களும் பூட்டிக் கிடந்ததால் மூடிக்கிடக்கும் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தன.
பிள்ளைகளுக்காக பந்தல் மேடை அமைத்து திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என பெற்றோர்கள் கண் கலங்க வேண்டிய சூழ்நிலை கொரோனா தொற்று நோய் அதிகரித்து வரும்.
நிலையில் சென்ற மார்ச் மாதம் முதலே புதிய திருமணங்களை புக்கிங் செய்ய திருமண மண்டபங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தன. திருமணகங்களும் சமூக இடைவெளியுடன் மிகக் குறைந்த அளவிலான சொந்தங்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு மட்டுமே நடத்த வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மற்றும் செயற்கை விலங்குகள் தயாரித்து புகழ்பெற்ற விஞ்ஞானி சிற்பியும் உடுமலை ஹக்கின் நாட்டிலேயே முதன்முறையாக இந்த நடமாடும் திருமணமகால் அறிமுகம் செய்துள்ளார்.
மண மக்களின் வீடுகளுக்கு அருகே மண்டபம் போல் செட் அமைத்து திருமணத்திற்கு வருபவர்கள் வரவேற்பு அருகிலேயே பரிசோதனை செய்து அனுப்புவதாக அமைத்துள்ளனர்.
சானிடைசர், மாஸ்க் வழங்கி தனிமனித இடைவெளியோடு பெரிய மண்டபத்தில் நடத்தப்படும். சுபகாரியம் போல் இந்த செட் அமைக்கப்பட்டது. உடுமலை ராயல் அரிமா சங்கத்தின் தலைவரும் அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் காந்திநகரில் இன்று தொடங்கி வைத்துள்னர்.
கொரோனா காலத்தை மனதில் கொண்டு இந்த நடமாடும் திருமணமஹால் பொது மக்களின் தேவைக்காக அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹக்கீம் என்பவர் முதலமைச்சர் பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரிடம் சிறந்த கலைஞருக்கான விருது பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.
புதுமையாக கண்டுபிடித்துள்ள நடமாடும் திருமண மண்டபம் தற்போது உள்ள சூழ்நிலைக்கு பெற்றோர்களின் ஆதரவை பெற்றுள்ளன.