தொழிலின் மார்க்கெட் நிலவரம் எப்படி?
உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கி மேலாளரிடம் உங்கள் தொழில் திட்டம் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். உங்கள் மனதில் நீங்கள் செய்யப் போகும் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு.
செய்யப் போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம் எப்படி, வங்கிக் கடனை எந்த வழியில் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்த வேண்டிய உத்தரவாதம். போன்ற விவரங்களை மனுவுடன் இணைத்து கொடுக்க வேண்டும்.
இதை வாங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன்பின் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். 3 முதல் 10 ஆண்டுகளுக்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம்.
தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டடம், இயந்திரம், கச்சா பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறும் வசதி உண்டு. அரசு வழங்கும் சலுகைகள் என்று சொன்னாள் 15 சதவீதம் மானியமாக வழங்குகிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்குகிறது. உற்பத்தி தொடங்கி ஆறு ஆண்டுகளில் செலுத்தப்படும் மதிப்பு கூட்டு வரி வாட் ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்குகிறது.
உற்பத்தி தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும். அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை மானியம் வழங்குகிறது. சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு உள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம். மானியம் வழங்கப்படும் தொழில்களான மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி, தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு.
மருந்துப் பொருட்கள் உற்பத்தி, சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி, ஏற்றுமதி ஆபரணங்கள், மாசுகட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சிக்கன கட்டுமானப் பொருட்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்ற தொழில்களுக்கெல்லாம் இந்த மானியம் வழங்கி வருகிறார்கள்.
தேவை ஏற்படும் போது தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கி வருகிறது.
புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற உடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம். எப்படிப் புரட்டுவது என்பது தான், ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து, அதன் பின் பணத்தை தேடுவதில்லை பலர்.