Jallikattu bulls

திருப்பாவை திருவெம்பாவை 3 ஆம் நாள்

மார்கழி மாதம் சிவபெருமானுக்கான திருவெம்பாவை, பெருமாளுக்கான திருப்பாவை 3 ஆம் நாள் கொண்டாட்டமாக இருக்கப் போகின்றது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்து கோலமிட்டு தமிழ்நாட்டில் விநாயகருக்கு பெண்கள் நீர் ஊற்றி அருகம்புல் வைத்து வணங்குவார்கள்.

மார்கழி பஜனைகள் இருக்கும். மார்கழி மாதத்தில் 30 நாட்களும் இறை வழிப்பாட்டுக்கான சிறப்பு வாய்ந்தாக இருக்கும்.

3. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் லூடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

வாமனன் மூன்றாடியால் உலகை அளந்து, ஓங்கி உயர்ந்தவர் திருமால் அவரின் அவதாரம் போற்றி அவரை வணங்கி தொடங்குவோம்.

மாதம் மும்மாரி மழை பெய்யும். செந்நெல் வயல்களில் பயிர்கள் வளரும், அதன் ஊடாக மீன்கள் துள்ளித் திரியும். நீல் நிலைகளில் குவளை மலர்கள் பூத்துக் குலுங்கும். அதன் மலர்களில் வண்டினங்கள் வந்தமர்ந்து தேன் பருகும்,

வள்ளல் பசுக்களோ தங்கள் மடியிலிருந்து பாலை அருவியாகப் பொழியும். என்றும் நீங்காத செல்வம் நமக்குக் கிடைத்திடும் பெண்ணே.

திருவெம்பாவை

3. முத்தன்ன வெண்ணகையாய்!

முன்வந்தெதிர் எழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித் தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!

பத்துடையீர்!

ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம்

புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

பொருள்:

எழுப்புபவள்: முத்துப் பற்களை உடையவளே, முன்பு நீ எங்களுக்கு முன்பாக வந்து எங்களை எழுப்பி, அப்பனே! ஆனந்தனே! அமுதனே! என்று வாய் இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்ந்து பேசுவாய். ஆனால் இப்போதோ, இப்படி படுக்கையில் கிடப்பதேன். உறங்குபவள்: நீங்கள் இறைப் பற்று உடையவர்கள். அந்த இறைவனின் அடியார்கள். நான் ஒரு புதிய அடிமை. எனது செயலை நீங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..? எழுப்புபவள்: உனது அன்பை நாங்கள் அறிவோம் பெண்ணே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *