திருப்பாவை திருவெம்பாவை 7 ஆம் நாள் பாடல்
மார்கழியில் பாவை நோன்பு இருக்கும் பெண்கள் சிவசிவ மற்றும் ஓம் நமோ நாராயணா என வணங்கும் பொழுது அவர்களுக்கான பாவங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு வேண்டியது கிடைக்கப் பெறலாம்.
7. திருப்பாவை
கீச் கீச்சென்று எங்கும் ஆணை சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்!
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்!
பொருள்:
புத்தியில்லாத பெண்ணே காலைப் பொழுது இது, பறவைகள் கூக்குரலிட்டன. இன்னுமா நீ தூங்குவாயா எழுந்திரு, கேட்கவில்லையா பறவைகள் நெய் மணம் வீசும் கூந்தல் கொண்ட ஆயர்குலப் பெண்கள் , ஆமைத் தாலி ஒலி எழுப்பியது.
புத்தியில்லாத பெண்ணே, அதிகாலை புலர்ந்து விட்டது. ஆணை சாத்தன் பறவைகள் கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பி தங்களுக்குள் பேசத் தொடங்கி விட்டன. பெண்ணே எழுந்திரு பரந்தாமன், நாரயண மூர்த்தி கேசவனை அச்சுதனை, அனந்தனை நாங்கள் பாடுகின்றோம். நீ கேட்டும் கேட்காததுபோல் தூங்கி கிடக்கின்றாயே எழுந்திரு கதவைத் திற
திருவெம்பாவை 7
அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர் உன்னற் கரியான்
ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள்
கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய் தென்னானென் நம்முன்னம் தீ சேர் மெழுகொப்பாய் என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!
பொருள்:
பெண்ணே இறைவன் தேவர்கள் அனைவரிலும் ஒப்பற்றவர். பெரும் ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் ஆற்றல் கொண்டவர். பெரும் கீர்த்தி கொண்டவர் அத்துடன் சிவசிவ என அழைதத்து, அக்னியில் உருகும் மெழுபோல் உள்ளம் உருகிப் போவாயே, இன்னும் விளையாட்டாக இருக்கின்றாயே உனக்கு என்ன ஆகிவிட்டது உறக்கத்திலிருந்து எழுந்திரு.