அசத்தல் ஆட்டோ.. இத்தனை வசதிகளா? வாய்பிளந்த தொழில் அதிபர்கள்..!!
கொரோனா சோதனையிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தூய்மை இந்தியாவை துரிதபடுத்துகின்றது. தொழிலதிபர்களை வியக்க வைத்த மும்பை ஆட்டோ ஒன்று அமைக்கப்பட்ட வசதிகளைப் பார்த்து தொழிலதிபர்களை வியந்து பாராட்டி உள்ளார்கள்.
இந்திய அளவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சாமானிய மக்களை தாண்டி மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி வருகின்றது.
சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளி என கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கைகளை மக்களிடத்தில் வலியுறுத்தி கொண்டுதான் இருக்கின்றது.
இந்நிலையில் மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை பல்வேறு வசதிகளுடன் மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் பார்த்த தொழிலதிபர்கள் ஆனந்த் மஹிந்திரா மற்றும் ஹர்ஸ் மரிவாளா ஆகியோர் ஆச்சரியமடைந்தனர். இந்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தொழிலதிபர்களை வியக்க வைத்த ஆட்டோவில் குப்பைகளை பிரித்து போடுவதற்கான இடம் உள்ளது. கைகளை கழுவ வாஷ்பேசின் வைக்கப்பட்டுள்ளது.
அந்த நீர் வீணாகாமல் இருக்க அருகே சில செடிகளும் வைக்கப்பட்டிருக்கும். கை கழுவும் நீரை செடிகளுக்கு செல்கின்றன. குடிநீர் இருக்கிறது.
செல்போன் சார்ஜர், வைஃபை, கூலர் ஃபேன், செல்போனுடன் இணைக்கும் வசதி கொண்ட டிவி, போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆட்டோவில் கொரோனா தொடர்பான உதவி எண்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி வாசகங்கள் போன்றவைகளும் அச்சிடப்பட்டுள்ளன.
அசத்தல் ஆட்டோவை பார்த்து இத்தனை வசதிகள் என்று வாய்பிளந்த தொழில் அதிபர்கள் இந்த அளவுக்கு வசதி கொண்ட ஆட்டோவை பார்த்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.