மக்களை மகிழ்ச்சியில் தள்ளும் பேருந்து துறையினர்
அடி தூள் சூப்பரான செய்தி காத்திருக்கிறது. சென்னை மாநகர பேருந்து சேவையில் சலுகைகள் பல இருப்பது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும். தெரிந்தும் தெரியாதவர்களுக்கும் அறிந்தும் அறியாதவர்களுக்குமான புதிய தகவல்.
சென்னை மாநகரப் பேருந்து சேவையில் முக்கியமான சலுகை 50 ரூபாயில் ஒருநாள் பாஸ். அதை காலையில் எடுத்தோம் ஆயின் அன்றைய நாள் முழுவதும் எந்த பேருந்தில் பயணித்தால் டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ரொம்ப ஜாலியா நினைக்காதீங்க ஏசி பஸ்ஸில டிராவல் பண்ண கூடாதுங்க.
அதனைத் தவிர்த்து டீலக்ஸ் மற்றும் சாதா பேருந்துகளில் எதில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஒரு நாள் மட்டும் பல இடங்களுக்கு சென்று வர வேண்டிய வேலைகள் இருந்தால் இது ரொம்ப பொருத்தம். ஆனால் பயணத்தையே தினசரி வேலையாக கொண்டு இருக்கும் நபர்களுக்கு இது பொருந்தாது.
இவர்களுக்கான பிரத்தியேக சலுகை என்னவென்றால் மாதம் 1000 ரூபாயில் மாதம் முழுவதிற்குமான இலவச பயணம் செய்யக்கூடிய பாஸ். இந்த பாஸ் வைத்திருக்கும் நபர்கள் டீலக்ஸ் மற்றும் சாதா பேருந்துகளில் எல்லா வழிகளிலும் எல்லா விதத்திலும் பயணிக்கலாம். ஏசி பஸ் பயணம் இந்தப் பாஸ்ஸிலும் செல்லாது.
ஐடி கார்டு வடிவில் இருக்கும் இந்த பாஸ்ஸின் மாதக்கணக்கு ஒரு மாதத்தின் 16ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை ஆகும். இந்த ஆயிரம் ரூபாய் பாஸ்ஸிற்கு ஒரு அட்டை தரப்பட்டு ஒவ்வொரு மாதமும் புதுப்பித்தலுக்கு அந்த அட்டையில் குறிப்பிடப்படும். புதுப்பிக்கும் ஒவ்வொரு மாதமும் ஐடி கார்ட் புதிதாக வெவ்வேறு நிறங்களில் வழங்கப்படும்.
இத எதுக்குங்க இப்போ சொல்றீங்க? என்று வினா எழுப்புவார்களுக்கு இதோ பதில். மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் பாஸ் தற்போது செல்லுபடியாகும்.
கொரோனாவல் மார்ச் மாதம் தொடங்கப்பட்டப் பொது முடக்கத்தால் எந்தவித பொதுச் சேவையும் இயங்காமல் நிறுத்தப்பட்டது. 1 செப்டம்பர் 2020 பேருந்து சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் அத் துறையினர் மகிழ்ச்சியான செய்தி கூறியுள்ளனர்.
மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் பாஸ் செப்டம்பர் 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பணப் புழக்கம் இல்லாத இந்தக் கொடுமையான சூழ்நிலையில் பேருந்து கட்டணங்களில் எந்தவித தளர்வுகளும் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த செய்தி ஒரு நற்செய்தியாக அமைகிறது.
சென்னை மாநகரத்தில் அலுவலகம் செல்லும் பலர் இந்த ஆயிரம் ரூபாய் பாஸை பயன்படுத்துகின்றனர். பொது முடக்கம் தளர்ந்து விட்ட நிலையில் மக்கள் அனைவரும் அவரவர் பொது வாழ்க்கையில் ஈடுபட துவங்கியுள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகர பேருந்து துறை அளித்த இந்த தகவல் மக்களிடையே மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறது.