ஆன்மிகம்ஆலோசனை

பல பெயர்களால் கந்தன் போற்றப்படுகிறான்

ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் கந்தஷஷ்டியில் துதித்து வழிபடுவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின்சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

  • திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
  • திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்
  • பழனி – மணிபூரகம்
  • சுவாமிமலை – அனாஹதம்
  • திருத்தணிகை – விசுத்தி
  • பழமுதிர்சோலை – ஆக்ஞை.

ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடிவிடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப் பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.

ஆறுமுகமான – சண்முக தத்துவம் என்ன ?
ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் – அக்னிக்கு,
மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் – பிரம்மனுக்கு,
ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் – கந்தனுக்கு.

உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,

பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,

வேள்விகளைக் காக்க ஒரு முகம்,

உபதேசம் புரிய ஒரு முகம்,

தீயோரை அழிக்க ஒரு முகம்,

பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

மேலும் படிக்க : குரு வாரத்தில் ஜகத்குரு அளிக்கும் ஆசிர்வாதம்

ஸரவணபவ – என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன?
ஸ – லக்ஷ்மிகடாக்ஷம்
ர – ஸரஸ்வதி கடாக்ஷம்
வ – போகம் – மோக்ஷம்
ண – சத்ருஜயம்
ப – ம்ருத்யுஜயம்
வ – நோயற்ற வாழ்வு பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.

மேலும் படிக்க : திருப்பாவை பாடலும் ஆண்டாளின் பெருமையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *