சினிமா

சிம்பு நடிக்க ராம் இயக்க அடடா!

சிலம்பரசன் (எ) சிம்பு திரையுலகில் சூப்பரான இடத்தைப் பிடித்து பெரிய ரசிகர் கூட்டத்தின் ராஜா. சிம்புவின் படத்திற்காக காத்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் இதோ சூப்பரான ஆப்படேட்.

சூப்பரான திரைப்பட பயணத்தை மேற்கொண்டு வந்த சிம்புவிற்கு நடுவில் சற்று சொதப்பல் ஆகிவிட்டது. கவுதம் வாசுதேவ் மேனன் சிம்பு ஜோடி பட்டையை கிளப்பி வந்தாலும் அச்சம் என்பது மடமையடா என்ற படம் சற்று ஏமாற்றத்தை அளித்தது.

தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த இயக்குனர் கதாநாயகன் ஜோடி சூப்பரான குறும் படத்தை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் பிடித்தனர். கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டது.

சிம்பு சற்று உடல் எடை கூடி உள்ளதாக காட்சியளித்தார். குண்டாக இருந்தாலும் சப்பியாக இருக்கிறார் என்பதே ரசிகர்களின் கருத்து. மகா மற்றும் மாநாடு என இரு படங்கள் படப்பிடிப்பில் உள்ள நிலையில் தற்போது இவருக்கு வந்துள்ள புதுப்பட வாய்ப்புகள்.

மனோஜ்-சிம்பு

கமல்ஹாசன் நடித்த சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பகுதி கூறப்போகிறது. இயக்குனர் மனோஜ் பாரதிராஜா திட்டமிட்டிருந்த சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளனர். முன்பு மனோஜ் பாரதிராஜாவே எழுதி இயக்கி நடித்து வெளிவர திட்டமிடப்பட்ட சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளி வரப்போகிறது சிகப்பு ரோஜாக்கள் 2. அதுமட்டுமல்லாமல் இயக்குநர் ராமிடம் ஏற்கனவே எழுதிய கதையில் தற்சமயத்துக்கு தகுந்தாற்போல் சற்று மாற்றங்களை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார் மனோஜ் பாரதிராஜா.

ராம்-மனோஜ்

இயக்குனர் ராம் மற்றும் மனோஜ் பாரதிராஜா நெருங்கிய நண்பர்கள் ஆவர். மேலும் பாரதிராஜா நடத்தும் திரை கல்வி நிறுவனத்தில் இயக்குனர் ராம் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். இந்த உறவின் பேரில் சிகப்பு ரோஜாக்கள் 2 திரைக்கதை ஏற்கனவே மனோஜ் பாரதிராஜா எழுதி முடித்திருந்தாலும் அதை தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் கதைக்களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு இயக்குனர் ராமிடம் இயக்குனர் மனோஜ் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

ராம்-சிம்பு

இயக்குனர் ராமின் தரமணி படம் வெளியிட்ட பிறகு சிம்பு இவரை அழைத்து தமக்கொரு திரைக்கதை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அப்பொழுது இயக்குனர் ராம் சிம்புவிற்கு கதை கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு முடிந்தபின் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சிகப்பு ரோஜாக்கள் 2 நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகுகின்றன. மேலும் மகா, மாநாடு, சிவப்பு ரோஜாக்கள் இந்த மூன்று படங்களைத் தவிர்த்து இயக்குனர் ராமின் பெயரிடப்படாத படமும் பட்டியலில் சேர்க்கிறது.

சிம்புவின் ரசிகர்களுக்கு சூப்பரான பட விருந்து காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *