Jallikattu bulls

அட்ரா சக்கை அட்ரா சக்கை இதான் தலைமை

அட்ராசக்க அட்ராசக்க இதைத்தான் எதிர்பார்த்தோம் கர்நாடக மாநிலம் மங்களூரில் பாதாள சாக்கடையில் இறங்கி மாநகராட்சி உறுப்பினர் தூய்மை செய்த காட்சியானது வைரலாக பரவி வருகின்றது. கர்நாடக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கர்நாடகாவில் கத்ரி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி கிடந்தது. இதனால் சாலையில் நீர் அதிகமாக தேங்கி மக்கள் போக்குவரத்தில் அவதிப்பட்டு வந்தனர். பாஜகவை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் மனோகர் செட்டி மாநகராட்சி ஊழியர்களை அழைத்தார்.

மழைக்காலம் என்பதால் ஊழியர்கள் சாக்கடைக்குள் இறங்கத் தயங்கினர். மாநகராட்சியில் இருந்து கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தை வரவைத்து அதனை சரிசெய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த வாகனமும் ரிப்பேர் ஆனதால், ஆபரேட்டர்கள் தூய்மைப் பணி மேற்கொள்ள முன்வந்தனர்.

இருந்தும் அவர்களுக்கும் இறங்கத் தயக்கம் இதனை பார்த்த மனோகர் செட்டி “எவரும் எனக்கு வேண்டாம் நானே பாத்துக்கிறேன்”, என்ற தோரணையில் சுமார் எட்டு அடி ஆழமுள்ள சாக்கடைக்குள் டார்ச்லைட் உதவியுடன் நாழு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கருவிகளை தூய்மை செய்தார்.

அவர் இறங்கியதை பார்த்ததும் பணியாளர்கள் அனைவரும் மிரண்டு போயினர் என்றே சொல்லலாம். அவருடன் ஆதரவாளர்களும் களம் இறங்கியதால் பாதாள சாக்கடை பணி முழுமையாக சீரமைக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதி ஒருத்தர் இப்படி இறங்கி வேலை வழங்கி வேலை செஞ்சா தான் ஊரு சுத்தமாகும் என்ற தோரணையில் மக்கள் மகிழ்ந்தனர். ஆனால் உண்மையில் அதிகாரத்தை விட்டு களத்தில் இறங்கியதால், கத்திரி மாநகராட்சி உறுப்பினர் மக்கள் மனதில் அவர் இடம்பிடித்துவிட்டார்.

இக்கட்டான சூழலில் தலைவன் தான் முதலில் களத்தில் இறங்க வேண்டும். என்பதற்கு முன்னுதாரணமாக இருந்த அந்த மாநகராட்சி தலைவருக்கு சலாம் போட்டு மக்கள் உற்சாகமடைந்தனர். இது போன்ற நாடு முழுவதும் இருந்தா நல்லா தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *