சமையல் குறிப்புவாழ்க்கை முறை

மங்களூர் போண்டா

தீபாவளி அன்று இந்த மங்களூர் போண்டா செய்து பாருங்கள். வழக்கமாக வடை, இனிப்பு அப்பம், பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, உளுந்து வடை செய்வது உண்டு. இதில் இந்த மங்களூர் போண்டாவையும் செய்து பாருங்கள். இந்த போண்டாவில் கீரை வகைகள் அல்லது கேரட் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஏதாவது ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  • தீபாவளி அன்று இந்த மங்களூர் போண்டா செய்து பாருங்கள்.
  • கீரை வகைகள் அல்லது கேரட் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஏதாவது ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மங்களூர் போண்டா

தேவையான பொருட்கள்

மைதா 200 கிராம், பச்சரிசி மாவு 30 கிராம், சீரகம் 5 கிராம், கெட்டித் தயிர் 150 கிராம், சமையல் சோடா ஒரு சிட்டிகை, டேபிள் சால்ட் ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் 4, இஞ்சி சிறிய துண்டு, எண்ணெய் தேவைக்கு ஏற்ப.

செய்முறை விளக்கம்

ஒரு பாத்திரத்தில் கெட்டித் தயிரை ஊற்றிக் கொள்ளவும். உப்பு, சீரகம் ஆகியவற்றை தயிரில் போட்டு கிளறவும். பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக கெட்டி தயிர் கலவையில் போட்டு நன்கு கலக்கி விடவும். மைதா போட்டு கெட்டி இல்லாமல் சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும். இதனுடன் பச்சரிசி மாவையும் கலந்து கொள்ளவும்.

எல்லா கலவையையும் நன்றாக கலந்து வைக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சற்று மிதமாக காய்ந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக மைதா கலவையை போட்டு பொன் வறுவலாக பொரித்து எடுக்கவும். சுவையான மங்களூர் போண்டா தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *