செய்திகள்

மாற்றம் நல்லதே !

மாற்றம் மகத்தானது …!

   மாற்றம் என்பது நாம் அனைவருக்கும் ஒரு வித  இனம்மறியா பதற்றதையும் , பயத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.  இட மாற்றம் , பதவி மாற்றம் , தொழில் மாற்றம் ,   உத்யோக மாற்றம் , பருவ மாற்றம்!   இப்படி பல!!  

நவீன தொழில் நுட்பம்

1800 களில் ஒரு சினிமா திறையிடப் பட்டது , அதில் இரயில் ஒன்று நேராக அதுவும் வேகமாக வருவதைப் போன்ற காட்சி . அக்காட்சி திரையில் வந்தவுடனே படம் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பதறி அடித்துக்கொண்டு ஓடினர்.  இரயில் திரையைக் கிழித்துக் கொண்டு வந்து நம்மீது மோதப் போகிறது என்று அனைவருமே நினைத்தார்கள்.  ஆனால் இன்றோ 3டி படங்கள்… அதுவும் துல்லியமான ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு கொண்ட நவீன தொழில் நுட்பம் நிறைந்த திரைப்படங்கள்.  அன்றோ அனைவரும் தெரித்து ஓடினர் ஆனால் இன்றோ மெய்மறந்து ரசிகின்றனர்.  எல்லா மாற்றமும் விரும்பத்தக்க மாற்றம் என்று கூறிவிடவே முடியாது. அதுவும் சூழலை பொறுத்தே அமையும்.

இன்றளவும் பெரியவர்கள் அதாவது சென்ற மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினர் நடக்க அஞ்சுவதே இல்லை . ஆனால் நாமோ ஒலா , யூபர்லிலே சொற்ப தூரத்தையும் கடகின்றோம் ! நடை அவ்வளவு நல்லது என மருத்துவர் கூறுவதற்கு முன்னரே அறிந்தவர்கள் அவர்கள்.  கண்ணாமூச்சி , கில்லி , கபடி , கிரிக்கெட் , நொண்டி , என தெருவில் விளையாடிய குழந்தைகள் தற்போது டேப்லெட் போனே கதி என்று முடங்கியே இருக்கின்றனர்.  

புகைப்பட நிறுவனம்

கோடாக் புகைப்பட நிறுவனம் , சுருள் பிலீமை நம்பியே இருந்தது. ஸ்டில்ஸ் கேமரா , புகைப்படம் டெவலப் செய்து தருவது என்று கொடிகட்டிப் பறந்தது.  எண்ணற்ற பணியாளர்கள் , உலகம் முழுவதும் கிளைகள் . கோடிக்கணக்கில் பணபரிவர்தனை என ஒரு ரெக்கை கட்டிய குதிரையாய்  பறந்து ஓடியது.  டிஜிட்டல் கேமரா வந்து பிரபலம் அடைந்த உடனே கோடக்கின் கொடி சரிந்தது. இன்றளவும் அவர்கள் கேமரா விற்பனை செய்தாலும் அந்த விறுவிறுப்பு இல்லை. 

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை நாம் கூர்ந்து கவனித்து , அதற்க்கு தகுந்தாற்போல் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் .  மாற்றம் ஒரு வரம். ஆம் பள்ளியில் இருந்து மாறியே கல்லூரி சென்றோம் . பிறகு அங்கிருந்து மாறியே வேலைக்கு சென்றோம்.  மாற்றம் வந்துகொண்டே தான் இருக்கும். நாம் அதை மிக அதிக அளவில் எதிர்பார்த்தால் ஏமாற்றமே. ஒரே அடியாக விலகி நின்றாலோ நம்மால் அதை எளிதில் அணுக முடியாது.  எனவே அதீத பயமும் வேண்டாம் , உற்சாகமும் வேண்டாம்.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் நம்மை போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றே.  இன்று கம்ப்யூட்டர் துறையில் கலக்குபவர் , முன்பு ஒரு நாள் கம்ப்யூட்டர் என்றால் என்ன வென்றே அறியாதவர் தான்.  சைக்கிள் ஒட்டக்கூட   பயந்தவர்கள் தான் இன்று பன்னாட்டு நவீன கார்களில் பாய்ந்து செல்கின்றனர்.  ஃபோனில் பொருள் வாங்கத் துவங்கி, பணம் அனுபிகின்றோம் , இப்படி டிஜிட்டல் தளத்தில் அசாத்திய  பயணம் செய்கின்றோம். இன்று மெட்ரோ இரயில் நமக்கு எவ்வளவு பழகி விட்டது ஆனால்  அந்த வசதியும் இடையில் ஏற்பட்ட மாற்றம் தானே. முயன்றால் முடியாதது இல்லை. மனமே மந்திரம்.    சா.ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *