செய்திகள்தேசியம்

கின்னஸ் சாதனை படைத்த நபர் ரூம் போட்டு யோசிப்பாங்களோ

டெட் காஸ்டிங் என்பவர் ஒரே நேரத்தில் 260 டீசர்ட்களை அணிந்து உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை தான் அவர்கள் வீடியோ வெளியீட்டு பகிர்ந்து உள்ளார்கள். இதில் அவசர அவசரமாக அவருக்கு டீசர்ட் அணிந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது ரசனையாக இருக்கிறது.

தன் குழந்தைகளுடன் 2019 கின்னஸ் உலக சாதனைகளை பார்த்த பின் தான் இந்த ஐடியா டெட்க்கு வந்தது. இவருடைய இளைய மகன் தான் இந்த சாதனையை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இதன் மூலம் கடின உழைப்பு பொறுப்புணர்வை பற்றிய முக்கியமான பாடங்களை தன் குழந்தைகளுக்கு சொல்லியிருப்பதாக டேட் குறிப்பிட்டதாக கின்னஸ் தெரிவித்துள்ளன.

இந்த சாதனை வீடியோவுக்கு 34 ஆயிரம் லைக்ஸ் பெற்றிருக்கின்றன. எத்தனையோ பேர் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர். கின்னஸ் உலக சாதனையில் சாதனை வீடியோக்கள் ஓ மை காட் என்றும், வாவ் என்று தான் மனிதர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு தீவிரமான கூடைப்பந்து சவால் ஒன்றின் வீடியோ வெளியிடப்பட்டு ஆச்சரியத்தை உண்டாக்கியது. தற்போது ஒரு அசாதாரணமான முற்றிலும் பொழுது போக்கான வீடியோவை வெளியிட்டு உலகையே ஓ போட வைத்து விட்டனர் கின்னஸ் உலக சாதனைகளை அங்கீகரிக்கும் நிறுவனத்தினர்.

கின்னஸ் உலக சாதனைகளை அங்கீகரிக்கும் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை எல்லாம் ஆச்சரியத்துடன் உச்சத்திற்கு அழைத்துச் சென்றன.

எத்தனை டீ சர்ட் ஒரே நேரத்தில் அணிய முடியும் என்பதை அந்த மனிதர் முறியடித்து விட்டார். ஒரே நேரத்தில் இத்தனை டி-ஷர்ட் அணிந்து கின்னஸ் சாதனை படைத்த நபர் நீங்களே பாருங்க அசந்து போவிங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *