காலமான இளம் மலையாள இயக்குனர்
48 வயதான இளம் மலையாள இயக்குனரான சச்சி காலமானார்.
ஐயப்பனும் கோஷியும் படம் 2020 ஹிட் லிஸ்டை பிடித்தது அதை இயக்கியவர் சச்சி (எ) கே. ஆர். சச்சிதானந்தம் 18 ஜூன் 2020 காலமானார். 48 வயதான இவர் உடல்நலக்குறைவால் காலமானார்.
திரிச்சூர் மாவட்டம் கொடுங்கலூரில் பிறந்த இவர் சட்டம் பயின்று எட்டு வருடம் குற்றவியல் பிரிவில் வக்கீலாக பணியாற்றியவராம். கல்லூரி படிப்பின் போதே திரைக் கலையில் ஆர்வம் உடையவராக இருந்ததால் திரையுலகில் தடம் பதித்தார்.
திரையுலகில் பன்முக வித்தகர்
மாலிவுட்டில் சேது என்னும் எழுத்தாளருடன் தன் எழுத்து பயணத்தை திரை உலகில் தொடங்கினார் சச்சி. திரை உலகம் தான் இவருக்கு சச்சி என்று பெயரிட்டது. சச்சி-சேது காம்பினேஷனில் பல படங்கள் வந்தன. சாக்லேட், ராபின் உட், மேக்கப் மேன், சீனியர்ஸ் அப்பட்டியலில் சேர்ந்தவை.
2012 ரன் பேபி ரன் என்ற படத்தின் மூலமாக தனித்துவ எழுத்தாளராகவும் 2015 அனார்கலி படத்தின் மூலமாக இயக்குனராக திரை உலகில் திகழ்ந்தார்.
எழுத்தாளர் இயக்குனருக்கு பிறகு தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். செட்டாயீஸ், ராம்லீலா, ஷெர்லாக் டாம்ஸ், ஓட்டுநர் உரிமம் குறிப்பிடத்தக்கவை. அவர் பணியில் கடைசியாக வந்த படம் ஐயப்பனும் கோஷியும்.
ஐயப்பனும் கோஷியும் மலையாள படத்தில் பிஜு மேனன் பிரித்திவிராஜ் நடித்தனர். தமிழில் எந்த இரு கதாநாயகர்களை கொண்டு இயக்கலாம் என்று பல பேச்சுவார்த்தைகள் அடிபடுகின்றன.
மறைவு
18 ஜூன் 2020 திரிச்சூரில் சச்சி காலமானார். சமீபத்தில் வடக்காஞ்சேரியில் ஒரு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். 16 ஜூன் 2020 செவ்வாய்க்கிழமை அன்று இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்கள் மூச்சுக்கூட விடமுடியாமல் வென்டிலேட்டரிலிருந்து மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஐயப்பனும் கோஷியும் படத்தை பார்க்காத யாரேனும் இருந்தீர்கள் ஆனால் படத்தைப் பார்த்து இயக்குனரை வாழ்த்துங்கள். சச்சியின் ஆன்மா சாந்தியடையட்டும்.