டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 மெயின்ஸ் தேர்வுக்கான குறிப்புகள்!

குரூப் 2 தேர்வின்  முக்கிய தேர்வான பிரைமரி தேர்வுகள் முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டாகிவிட்டது. இதனை அடுத்து முக்கிய தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவருக்குமான அறிவுப்புகளும், தேர்வுக்கான முக்கிய குறிப்புக்களை கொடுத்துள்ளோம். முழுமையாகப் படித்துப் பின்ப்பற்றுங்கள்.

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள்  வெளியாகின. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்புகள் கொடுத்துள்ளன. 
டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் குறிப்பில் குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு முடிந்தப் பின் வெற்றி பெற்றோர் மெயின்ஸ் தேர்வுக்கு தகுதியுடையோர்கள்  தேர்வு முடிவுகள் 36 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்தப்படி  அறிவிக்கை வெளியிடப்பட்ட 2 மாதங்களில் முதல்நிலை தேர்வும், 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், 2 மாதங்களில் முதன்மை எழுத்துத் தேர்வும், 3 மாதங்களில் முதன்மை தேர்வுக்கான முடிவுகளும், 15 நாட்களில் நேர்முகத் தேர்வு நடத்தி 10  மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது.

மேலே குறிப்பிட்ட  அறிவிப்பின்படி குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வுக்கான முடிவுகள் 36 நாட்களுக்குள் அறிவித்துள்ளது. அதன்படி முக்கிய தேர்வுக்கு விண்ணப்பிக்க  வேண்டும் சான்றிதழ் பதிவேற்றம் முறையாக செய்திருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமும் முறையாக செலுத்த வேண்டும். 

மெயின்ஸ் தேர்வு பிப்ரவரி 23, 2019 அன்று முதன்மை தேர்வு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி முக்கிய தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் குறிப்புகள்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2   முக்கிய தேர்வானது  ஒரேதாள் கொண்டது மற்றும் 300 மதிபெண்களுடன் 3 மணி நேரம் கொண்டது. 
குரூப் 2 மெயின்ஸ் தேர்வானது ஒரேதாள் மற்றும் விளக்கவுரையில் பதில் எழுத வேண்டும். ஆங்கில மற்றும் தமிழில் இருக்கும். விடைகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் எழுதலாம். 

மெயின்ஸ் குரூப் 2 தேர்வானது இந்தியா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் தொழில்நுட்பம் குறித்து கேள்விகள் இருக்கும். மற்றும் மத்திய மாநில சிறப்புரிமைகள் குறித்து படிக்க வேண்டும். சமூக வாழ்க்கை மற்றும் சாவால்கள் அத்துடன் நடப்பு நிகழ்வுகள்  ஆகிய  பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மெயின்ஸ் தேர்வானது 5 மதிபெண்கள் மற்றும் 8 மதிபெண்கள், 15 மதிபெண்கள், 30 மதிபெண்கள் கொண்டத் தேர்வுக்குத் தயாராக இருக்க வேண்டும். 

சுயபரிசோதனை அல்லது டெஸ்ட் பேட்ச் என்பதை அல்லது சுயமாக அல்லது பயிற்சி நிறுவனங்கள் மூலமாக படித்தவற்றை திரும்பத், திரும்ப படிக்கவும் எழுதிப்ப் பார்க்க வேண்டும். 
நடப்பு நிகழ்வுகள் தொகுப்புகளான குறிப்புகள் தயாரித்து தேர்வு நேரத்தில் பயன்படுத்தலாம்.  
தேர்வு நேரத்தை  குறித்து வைத்து செயல்படுங்கள்,

தேர்வுக்கு கையில் இருக்கும் நாட்கள் மற்றும் அதுகுறித்த நேரத்தை சரியாக கணக்கிட்டு நேர மேலாண்மையை பின்ப்பற்றி படித்து  தேர்வுக்குத் தயராக வேண்டும். 
குரூப் 2 மெயின்ஸ் தேர்வு விளக்கவுரையில் எழுத வேண்டும் மேலும் 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து கேள்விகளையும் எழுதி முடிக்க வேண்டுமெனில் எழுத்துப் பயிற்சி  செய்து கொண்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும்.
தேர்வுக்கானப் பாடங்களை   அதற்குரிய சிறப்புகள் மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளின் சவால்கள் குறித்து படிக்க வேண்டும், குறிப்பிட்ட தலைப்புகளின்  முக்கிய அம்சத்தைப் படிப்பதோடு அதன் செயல்பாடு குறித்தும்  தெரிந்திருக்க வேண்டியது தேர்வர்களின் கடமை ஆகும். 

மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் திட்டங்களின் பயன்கள் அனைத்தும் மனனம் செய்திருக்க வேண்டும்.திட்டங்களின் பெயர்களை நினைவில் வைக்க குறிப்பு சொல்லை முன்வைத்து நினைவுப்படுத்தி படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *