டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்யின் குரூப் 2 தேர்வையடுத்து மெயின்ஸ் தேர்வு!

டிஎன்பிஎஸ்சி  நவம்பர் 11 ஆம் தேதி நடத்திய குரூப் 2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 6,27,726 பேர் இத்தேர்வை எழுதினார்கள்.
டிஎன்பிஎஸ்சியால் அறிவிக்கப்பட்ட  நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேலைவாய்ப்புத் துறை போன்ற பொதுப்பணித் துறைகளுக்கு மொத்தம் அறிவிக்கப்பட்ட 1199 இடங்களுக்கான தேர்வானது நவம்பர் 11, 2018 காலை 10 மணி தொடங்கி 1.00 மணிக்கு முடிவுற்றது. மொத்தம் 400 மையங்களில்  தேர்வர்கள் எழுதினார்கள். 

முக்கிய தேர்வு

இன்று குரூப் 2 தேர்வுக்கான கேள்விகளுக்கான விடையை டிஎன்பிஎஸ்சி தளத்தில் வெளியிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  நடைபெற்ற குரூப் 2 தேர்வில் நடப்பு நிகழ்வுகளின் கேள்விகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தேர்வானது எதிர்கொள்ளும் அளவிற்கு இருந்தது என்று தேர்வர்கள் அறிவித்தனர். நகர பகுதியினரை விட ஊரக மண்டல பகுதி தேர்வர்களுக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

புதிதாக தேர்வு எழுதுவோர்கள் தேர்வினை எதிர்கொள்ள கொஞ்சம் தடுமாறினார்கள் என்றும் தெரிவித்தனர். 
குரூப் 2 தேர்வுக்கான  முதன்மை தேர்வு முடிவடைந்தது இனி குரூப் 2 தேர்வுக்கான முக்கிய தேர்வுக்கு படியுங்கள்.  போட்டி தேர்வில் வெற்றி பெற அடுத்தடுத்த தேர்வினை எதிர்கொள்ள படித்தல் என்பது அவசியமானது ஆகும். 

திட்டமிட்டு படியுங்கள்

குரூப் 2 மெயின்ஸ் தேர்வுக்கு எவ்வாறு படிக்க வேண்டும் என்பதையும் மெயின் தேர்வுக்கு படித்து கொண்டே, அடுத்து டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள  மற்றத் துறை தேர்வுக்கு தயாராவது குறித்து திட்டமிட்டு படியுங்கள்.

காலம் கண் போன்றது மேலும் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ள அனைத்து தேர்வுக்கும் பொது அறிவுப் பகுதி என்பது  பொதுவானதாக இருக்கும் ஆகவே எளிதாக தேர்வை வெல்லலாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *