மாற்றத்தைக் கொண்டுவரும் இ.ஐ.ஏ. 2020
மரம் நடு! இன்றைய சமுதாயத்தினர் மரம் நட்டால் நாளை உன் சந்ததிகளுக்கு எந்த வளமும் குறையில்லாமல் மழை பொழியும்.
இப்படி பலர் சொல்லிட்டே தான் வராங்க. ஆனா எத்தனை பேர் கேட்டு இருக்கோம்? சமூக வலைத்தளங்கள்ல சமீபத்துல பெண்களே ஆதரிக்கும் பெண்கள் அப்படினு கருப்பு வெள்ளை சவாலுக்கு பல வரவேற்பு வந்தது. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சமூக வலைதளங்கள்ல வைரலானா பொதுவாழ்க்கையில் ஈசியா ஈடுபடுத்த முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
சமூக வலைதளங்கள் ஒரு தளமா இருந்தாலும் ஒரு விஷயத்தை யாரெல்லாம் கடைப்பிடிக்கிறாங்க எப்படி பின்பற்றாங்க அப்படிங்கறது அடுத்த விஷயம். ஒரு சாதாரண மனுஷன் ஆயிரம் மரங்கள் நட்ட பத்தாயிரம் மரங்கள் நட்ட சொல்றது சாதனையா எல்லாரும் பார்க்கிறார்களே தவிர யாரும் கடைப்பிடிக்கிறது இல்லை.
சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கு முக்கியமான விஷயம் மரங்கள் தானங்க. திரையுலக நட்சத்திரங்கள் சமுதாயத்தில ஒரு மாற்றத்தை கொண்டு வரத்துக்காக மரம் நடத் துவங்கி ஒருத்தர் இன்னொருத்தருக்கு சவால் செய்யறா மாதிரி அது அப்படியே ஒரு சங்கிலியாடம் எல்லாரும் மரம் நட்டு நல்ல ஒரு சுற்றுப்புற சூழலை உருவாக்குறாங்க.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன்னோட பிறந்த நாளை முன்னிட்டு இந்த செயலை தொடங்கி அந்த சங்கிலியை தொடர அவரோட திரையுலகிலேயே ஜூனியர் என். டி. ஆர். மற்றும் தமிழ் திரையுலகின் தளபதி விஜய் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனை போன்றவர்களை மரம் நட தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கூறியிருக்கிறாரு.
அதத்தொடர்ந்து தமிழ் திரையுலகத்தோட முன்னணி நடிகர்கள் இந்த செயலை செம்மையா தொடர்ந்துடே வராங்க. இவங்கள பார்த்துட்டு அவங்க அவங்களோட ரசிகர் கூட்டம் ஆங்காங்கே மரங்கள் நட்டு செம்மையான பனியன் நடத்தி பசுமையான சூழல உருவாக்குகிறாங்க.
சூப்பரான சுற்றுப்புற சூழலோட இந்த 73 வருட சுதந்திர வாழ்க்கையின் வெற்றிகரமான முடிவும் 74 வது சுதந்திரதினத்த் நம்ம எல்லாரும் நம்ம நாட்டுக்காக சந்தோசமா பெருமையா கொண்டாடுவோம்.