மகேஷ் பாபு பிறந்தநாளையொட்டி தற்போது வெளியான மோஷன் போஸ்டர்
ஹாப்பி பர்த்டே மகேஷ் பாபு.

கொரோனா வந்தாலும் வந்தது பல சேனல்ல பல வேற்று மொழிப் படங்களை தமிழாக்கம் செஞ்சு போடறாங்க. முன்னவிட மகேஷ் பாபுவ இப்போ பல பேருக்கு தெரிய காரணம் இதுதாங்க இருக்கு. தமிழ்ல எந்த படமும் கிடைக்கலன்னா தெலுங்கு படத்தை தமிழ்ல டப் நிறைய ஸ்டாக் வச்சு டக்குனு ரிலீஸ் பண்ணிடறாங்க.
மகேஷ் பாபு
9 ஆகஸ்ட் 1975 இல் பிறந்திருக்கிறாரு மகேஷ் பாபு. 1979 தன்னோட நாலு வயசுலயே படத்துல நடிக்க ஆரம்பிச்சிட்டாருனா பாத்துக்கோங்களேன். 11 வருஷம் குழந்தை குணச்சித்திர நடிகரா பல படங்கள்ல நடிச்சிருக்காரு. அதுல என்ன ஹைலைட் நான் ஒரு படத்தில இரட்டை வேடத்திலையும் நடிச்சிருக்காரு.
தன்னோட படிப்பையும் பாக்கணும்னு சொல்லிட்டு ஒரு ஒன்பது வருஷம் கேப் விட்டு 1999 மறுபடியும் நடிப்புக்கு சூப்பரான கதாநாயகரா திரும்பினாரு. கதாநாயகராக களமிறங்கிய முதல் படம் ராஜ குமாரடு பல வெற்றிகளை தழுவி இவரோட நடிப்பு விருதுகளை பெற்றது. முதல் வருடம் மட்டுமே ஒரே ஒரு படம் கொடுத்தவரு அதுக்கப்புறமா வருடாந்திரமா பல படங்கள் கொடுத்துட்டு வந்தாரு.
2000ல வம்சி படத்துல நர்மதா ஷிரோட்கர் கதாநாயகியா இவருடன் நடிக்க இருவரும் காதலில் விழுந்தார்கள். நான்கு வருட காதலுடன் 2005ல் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செஞ்சுகிட்டாங்க. இவங்களுக்கு ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்காங்க.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், ஊடக ஆளுமைனு எல்லாத்தையும் கலக்குறவரு மகேஷ் பாபு. தன்னோட வருமானத்துல 30% பரோபகாரம் செய்யறாரு. மற்ற திரையுலக நடிகர் நடத்தும் பரோபகார செயலுக்கு துணையாக நிற்கிறாரு மகேஷ் பாபு.

தெலுங்கு திரையுலகித்திலையே வளம் வந்துட்டு இருந்த மகேஷ் பாபு 2017ல தமிழ்த் திரையுலகத்திலையும் நடிச்சாரு. தெலுங்கு தமிழ் என இரண்டு மொழியிலும் வெளியான ஸ்பைடர் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைச்சது. அதுக்கு முன்னாடி வரைக்கும் தமிழ்ல இளையதளபதி விஜய் நடிச்ச படத்த தெலுங்கு ரீமேக் பண்ணாலே அதுல மகேஷ் பாபு பார்க்கலாம். ஸ்பைடர் படம் இவருக்கு தமிழ் ரசிகர்களை சேர்த்துது.

இப்போ தெலுங்குல சர்க்காரு வாரி பட்டா படத்தில் நடிக்கிறாரு. தந்தை கிருஷ்ணாவோட இணைந்து நடிக்கிறாரு. மே 31 மகேஷ் பாபுவோட தந்தை மற்றும் படத்தில நடிக்கும் தோழனின் பிறந்த நாளையொட்டி இந்த படத்தோட போஸ்டர் வெளியிட்டு இருந்தாங்க.
போஸ்டர்ல மகேஷ் பாபு கழுத்தில ஒரு ரூபாய் நாணயத்தின் டடுவோட காட்சியளித்தாரு. இன்னிக்கு இவரோட பிறந்தநாள் ஸ்பெஷலா இந்த படத்தோட மோஷன் போஸ்டர் வெளியிட்டு இருக்காங்க.
மக்களே மோஷன் போஸ்டர பார்த்துட்டே இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள சொல்லிடுங்க.