மகாசக்தியான லலிதாம்பிகை ‘ஸ்ரீ மாத்ரே நமஹ’
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அம்பிகையைப்பற்றி குறிப்பிடுகையில் ‘நான் ஒரு யந்திரம் நீயே அதனை இயக்குபவன்’ எனக் கூறியுள்ளார்.
‘ஸ்ரீ மாத்ரே நமஹ’
- தன்னம்பிக்கை கூடும்.
- லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.
- ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
வெகுகாலம் முன்பு நாரகாசுரன் என்ற அரக்கன் இருந்தான்.அவனது தீய சக்தியால் பிரபஞ்சத்தினை அவன் ஆட்டிப்படைத்தான். கந்த பிரானின் தோற்றமே இவ்வரக்கனை அழிக்க முடியும் என துன்பப்பட்ட தேவர்கள் உணர்ந்தனர். கந்தனின் பிறப்பு தாமதமாகியது. காரணம் சிவ பிரான் நீண்ட ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.
சிவபிரான் எழுப்ப வேண்டிய தேவர்கள் மன்மதனை வேண்டினர். மன்மதனும் அவ்வாறே செய்ய தவம் கலந்த கோபத்தால் சிவ பிரான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க மன்மதன் சாம்பலானார். கூடவே கந்தனும் தோன்றினார் மன்மதன் மறைந்ததால் பூ உலகில் மனிதகுலம் தோன்றுவது தடைப்பட்டது.
இதனை உணர்ந்த சிவபிரான் ஆசிர்வாதத்தால் மன் மதன் உயிர் பெற்றான். கூடவே பண்டாசுரன் என்ற அரக்கனும் தோன்றினான். அவனால் மூவுலகமும் பாதிக்கப்பட்டது. சிவபிரானின் அறிவுரைப்படி இந்திரன் மிகப்பெரிய யாகம் ஒன்றினை செய்ய அந்த அக்னியிலிருந்து. லலிதாம்பிகை தோன்றினாள். பண்டாசுரனை அழித்தாள். சிவபிரானை மணந்தாள்.
மேலும் படிக்க : திருத்தணி ஐந்தாம் படைவீடு
இப்பிரபஞ்சத்தின் மகாசக்தி யான லலிதாம்பிகையை ‘ ஸ்ரீ மாத்ரே நமஹ’ என்று தாயாக வணங்கத்தான் ஸ்லோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லலிதாம்பிகையின் அழகினை வர்ணிக்கப் படும் பொழுது நாம் அதில் லயித்து விடுவோம். கரிய நீண்ட கூந்தல், கஸ்தூரி திலகம், அன்பான கண்கள், அந்த கரு விழிகள் ஏரியில் மீன்கள் உலவுவது போல் உலவுகின்றன.
மூக்கில் நட்சத்திரங்கள் மின்ன காதில் சந்திர சூரியன் ஒளிர, கன்னங்கள் பளிங்காய் ஜொலிக்க, பளீர் என முத்துப்பற்கள் பிரகாசிக்க வாசனை கற்பூரம் சேர்த்த தாம்பூலம் தரித்தவளாய் காட்சி தருகின்றாள் என அம்பிகை விவரிக்கும் பொழுது மனம் அதில் ஒடுங்கும். அம்பிகையின் குரல் சரஸ்வதி மீட்டும் வீணையின் ஒலியினை விட இனிமை என்று படிக்கும் பொழுது மனம் அக்குரலைக் கேட்க ஆசைப்படும்.
அந்த புன்முறுவலின் அழகு கண்டு சிவபிரானே தன் கண்களை நகர்த்த முடியவில்லையாம். இப்படியெல்லாம் கூறப்படும் அம்பிகையினை நம் கவனத்தால் உள்ளுணர்வால் ஒருமித்து தியானம் செய்தால் காண முடியும்.