செய்திகள்தேசியம்

பறவைக் காய்ச்சல் பீதி..!! 25,000 கோழிகளை கொல்ல அரசு அதிரடி உத்தரவு..!!

பறவை காய்ச்சல் பரவல் காரணமாக கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25 ஆயிரம் கோழிகளை கொல்ல மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் உள்ள கோழிப்பண்ணையின் வளர்ப்பு கோழிகளுக்கு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்குள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பறவை காய்ச்சல் காரணமாக கோழிக்கறி விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், தானேவில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை கொல்ல மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெஹ்லோலி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் சுமார் 100 கோழிகள் இறந்துள்ளன. பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அவற்றின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும், பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை மற்றும் அதனை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 25,000 பறவைகள் அடுத்த சில நாட்களுக்குள் கொல்லப்படும். அதன்படி,நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க தானே மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *