மஹாளய பக்ஷ 16 நாட்கள் என்ன செய்யணும் தெரியுமா?
புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் மஹாளய பட்சமான இந்த 15 நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்த 15 நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வருவதால் நம் வாழ்க்கை விருத்தி அடைவது உறுதி.
பூலோகம் வரும் நம் முன்னோர்கள் மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிக்கப்படுகிறார்கள். முன்னோர்களின் வருகை நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே. எனவே அவர்கள் மஹாளய பட்சம் 15 நாட்களும் நம் இல்லத்திற்கு வருவதால் நம் வீட்டை சுத்தமாக வைத்து முன்னோர்களை வணங்கி இந்த 15 நாட்களும் வழிபட அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதியில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் ஆனது எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பார். பூலோகம் வரும் முன்னோர்கள் மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாள் என்று நம் முன்னோர்கள் அவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிக்கபடுவதால் இந்தப் 15 நாட்களை தவறவிடாதீர்கள்.
பித்ரு தோஷம் அல்லது முன்னோர்களின் சாபம் உள்ளவர்களுக்கு இது குறிப்பிடத்தக்க காலமாகும். காகங்களுக்கு இந்த 15 நாட்கள் தவறாமல் தினமும் அன்னம் படைக்க வேண்டும். இந்த உணவை அவர்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம், மூதாதையர்கள் மகிழ்ச்சி அடைவதாக அறிவுறுத்தப்படுகிறது. காகம் நாம் படைத்த அன்னத்தை, உணவை மறுத்தால் இறந்தவர்கள் அதிருப்தி அடைவதைக் குறிக்கிறது.
மக்கள் வழங்கிய உணவை ஏற்றுக் கொள்வதன் மூலம் மூதாதையர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறப்படுகிறது. காகத்திற்கு உணவு படைப்பதால் அவர்களுக்கு பசி அடங்கி அதன் மூலம் நம்மை ஆசீர்வதிப்பார். ஆன்மாக்கள் அமைதியாகவும், பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுபடவும் சடங்குகள் செய்யப்படுகின்றன.

இறந்தவர்களின் அதிருப்தி அடைந்த ஆத்மாக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை காண பூமிக்கு திரும்புகிறார்கள் என்று கூறப்படுகின்றன. அவர்கள் மோட்சத்தை அடைந்து விடுதலையை பெறுவதை உறுதி செய்வதற்காக மக்கள் தங்கள் தாகத்தைத் தணித்து அவர்களின் பசியை பூர்த்தி செய்து சமைத்த அரிசி மற்றும் கருப்பு எள் ஆகியவற்றைக் கொண்ட உணவை வழங்குகின்றனர்.
இறந்தவர்களை சமாதானப்படுத்தும் சடங்கு இந்த பிரார்த்தனைகள், இறந்த உறவினர்கள் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக தற்பணம் சடங்குகள் செய்யப்படுகிறது. செப்டம்பர் 2 தொடங்கி செப்டம்பர் 17 மஹாளய அமாவாசை வரை இந்த 16 நாட்களும் முன்னோர்களை வழிபடலாம்.
இச்சடங்கு மஹாளய பட்சம் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களின் ஆன்மா சாந்தியடைய செய்யப்படுகிறது. இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுவார்கள். இறந்த அன்புக்குரிய அவர்களுக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் காலம் என்று கூறலாம்.