ஆன்மிகம்ஆலோசனை

மகாலட்சுமியின் அனுகிரகம் நிறைந்த

சோழிகள் மகாலட்சுமியின் அனுகிரகம் நிறைந்தது. சோழிகள் சத்தம் வீட்டில் இருந்தால் லட்சுமி கடாட்சம் அப்படின்னு சொல்லுவாங்க. பாருங்க எவ்வளவு ஒரு நல்ல அருமையான ஒரு சப்தம். சோழிகளின் வகைகள் கிட்டத்தட்ட 130 வகைகள் இருக்காங்க.

  • சோழிகளின் வகைகள் கிட்டத்தட்ட 130
  • சோழிகள் மகாலட்சுமியின் அனுகிரகம் நிறைந்தது.
  • தாம்பூலத்துடன் சோழிகளையும் சேர்த்து தானம் செய்யலாம்.

தாம்பூலத்துடன் சோழி

நம் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையில் மட்டும் சோழிகளை எடுத்து சாமி அறையில் வைத்துக் கொள்ளலாம். மீதி உள்ள சோழிகளை வீட்டிற்கு வருபவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்கும் போது தாம்பூலத்துடன் எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் இந்த சோழிகளையும் சேர்த்து தானம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

வாஸ்து குறைபாடு நீங்க சோழி

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கடைபிடித்த ஒன்று. இதனால் மகாலட்சுமி நம்மை விட்டுப் போய் விடுவார் என்று என்ன வேண்டாம். நாம் இந்த தானத்தை செய்வதால் அவர்களுக்கும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். நம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு நீங்குகிறது. சோழியை வாங்குபவருக்கும், கொடுப்பவருக்கும் இரண்டு பேருக்குமே நன்மையை செய்யக் கூடியது.

உங்களுக்கு யாராவது சோழியை தானம் கொடுத்தால் வேண்டாம் என்று ஒதுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். பூஜை முடிந்த பிறகு வெற்றிலை தாம்பூலத்தை நம் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். அப்படி யாருக்கும் சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால் அந்த வெற்றிலையை வேறு யாருக்கு வேண்டுமானாலும் தானமாக கொடுக்கலாம். காய விடக் கூடாது.

வெற்றிலையை அப்படி கொடுக்கும் போது இந்த சோழியை சேர்த்து தானம் கொடுப்பது சிறந்தது. எவர் ஒருவர் அதிகமாக தன்னிடம் இருக்கும் பொருட்களை தானமாக கொடுக்கிறார்களோ? அவர்களுக்கு தான் லட்சுமியின் அருள் கிடைக்கும். மனதார கொடுப்பவர்களுக்கு இவர்கள் நிறைய கொடுப்பதால் இவர்களுக்கு இன்னும் கொடுக்க வேண்டும் என்று மகாலட்சுமி மேலும் மேலும் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

நிறைய பேருக்கு தெரியாததால் சோழியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் பூஜை அறையிலேயே வைத்திருப்பார்கள். சோழிகள் பிரசன்னம் பார்ப்பதற்காக பயன்படுகின்றன. நிறைய வகைகள் உண்டு. சோழிகள் மான் சோழி, புலி சோழி, பல் சோழி, ஒட்டக சோழி, கரும்புள்ளி சோழி, ராவணன் சோழி, சோழி 30 வகைகள் இருக்கின்றன என்பது தான்.

சோழிகளின் முக்கியமான அம்சம்

முக்கியமான அம்சம் என்னவென்றால் இருக்க கூடிய சின்ன சின்ன பிரச்சனைகள் பற்றி சொல்வதற்கு சோழி அனைத்துமே வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடிய சோழிகள். 11 சோழிகள் வைத்து தான் பிரசன்னம் பார்ப்பார்கள். வருகின்ற காலம், எதிர்காலம் பற்றி துல்லியமாக எடுத்துக் கூறுவார்கள். பிரசன்னம் பார்ப்பார் இருந்தால் சோழி கவிழ்ந்து இருந்தால் என்ன பலன், சோழி நிமிர்ந்து இருந்தால் என்ன பலன் என்று கூற பிரசன்னத்தில் தெளிவாகக் கூறுவார்கள்.

பல்லாங்குழி, ஆடுபுலி, தாயக்கட்டை விளையாடுவதற்கு பயன்படுகிறது. சோழிகளின் சத்தம் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக பல வகைகளில் பயன்படுத்துகிறோம். இதற்கு தீட்டு என்பது கிடையாது. சோழியை ஆபரணங்களாக பயன்படுத்துவதும் உண்டு.

மேலும் படிக்க : திருப்புகழ் 45 கன்றிலுறு மானை (திருச்செந்தூர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *