மகாசிவராத்திரியன்று தெறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்
மாசி மகா சிவராத்திரி
மாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி மகாசிவராத்திரியாக வழிபடப்படுகிறது. அன்று விரதம் மேற்கொண்டு இரவு கண்விழித்து எம்பெருமானை வழிபடுவது விசேஷம்.
ஜோதி வடிவான சிவபெருமான்
‘தேசனடி போற்றி’, ‘மாசற்ற ஜோதி’, ‘ஜோதியனே’, ‘காண்பரிய பேரொளியே’, ‘சுடரொளி’, ‘ஜோதியனே சுடரே சூழொளி விளக்கே’ என்று பலவாறாக சிவபெருமானை ஜோதி வடிவானவர் என போற்றியுள்ளனர் நம் ஆன்மீகம பெரியோர்கள்.
குறிப்பாக சுந்தரர் தமது தேவாரப் பாடல்களில் ‘ஒண்சடர்’, ‘சுடர்ஜோதி’, ‘ஜோதியர்’, ‘ஜோதியுட்ஜோதி’, ‘நலங்கொள் ஜோதி’ போன்றவற்றாலும் மற்றும் வில்லிபுத்தூரார் ‘எங்குமாய் விளங்கும் ஜோதி’ என்றும் எம்பிரானை குறிப்பிட்டு போற்றியுள்ளனர்.
சிவம்! சிவன்!
சைவ சமயத்தின் முழு முதற்கடவுள் ‘சிவன்’; செம்மை என்ற சொல்லிலிருந்து ‘சிவம்’ என்ற சொல் பிறந்தது. நன்மை, கடவுளின் அருவுரு நிலை, முக்தி, மங்கலம், உயர்வு, களிப்பு என பலப் பொருட்களை ‘சிவம்’ என்ற சொல் தருகிறது. அதே சமயத்தில் செம்மை, மங்கலம், நன்மை இம்மூன்றும் உடையவனை ‘சிவன்’ என குறிப்பிட்டனர். ஆகையால் ‘சிவம்’ ‘சிவன்’ ஆனது.
கதை கேட்கலாமா!
முன்னொரு காலத்தில் பிரம்ம தேவரும் மஹா விஷ்ணுவும் நான் தான் பெரியவர் என்று வாக்குவாதம் செய்துக்கொண்டிருந்தனர், அது முத்தி பெரும் போராக மாறிற்று.
அவர்களின் போரின் தாக்கம் தேவலோகம், கைலாயம் என எல்லா இடங்களிலும் பறவிற்று. அப்பொழுது தூண் போன்று அளவிற்கு பெரிய ஜோதி வடிவம் தோன்றியதில் இருவரும் சண்டையை மறந்து ஆதி அந்தத்தை தேடி சென்றனர். அடியும் முடியும் காணாமல் அந்த ஜோதியிடம் யார் என்று கேள்வி எழுப்பினர். ஐந்து முகத்துடம் பத்து கரங்களுடன் முப்பாட்டன் எம்பிரான் சிவபெருமான் காட்சியளித்தார். அதுவே முதல் ஜோடி வடிவம்.
மேலும் படிக்க ; பிரதோஷ காலத்தில் உச்சரிக்க வேண்டிய சிவன் 108 போற்றி
லிங்க வழிபாடு ஏன்?
ப்ருகு மகரிஷி அவிர்பாகம் கொடுப்பதற்காக மூன்றுலகையும் சென்று சோதித்த பின்னரே கொடுக்க வேண்டும் என்ற முடிவெடுத்தார். கைலாயத்திற்கு சென்றப்போது அம்மையும் அப்பனும் ஆனந்தி தாண்டவம் ஆடிக்கொண்டிருந்ததில் மகரிஷி வந்ததை கவனிக்கவில்லை. அவர் கோபத்தில் அர்ச்சாவதார வழிபாடு இனி இல்லை என எம்பிரானுக்கு சாபமிட்டார். ஆகையால் லிங்க வழிபாடு செய்கிறோம்.
பாணம் ஆவுடை
லிங்கம் என்பது இரு பகுதிகளை கொண்டது. மேலிருக்கும் உருண்டை போன்றது ‘பாணம்’ என்றும் அடி தளம் போன்றது ‘ஆவுடை’ என்றும் கூறுவர். லிங்கத்தில் பாணம் சிவனின் சுவருபமாகவும் ஆவுடை அம்பாளின் சுவருபமாகவும் திகழ்கிறது.
சில ஸ்தலங்களில் நிலமே ஆவுடையாக திகழ்கிறது.
ஜோதிர்லிங்கங்கள்
ஜோதியும் லிங்கமுமாக இருக்கும் சிவபெருமான் தனித்தனியான வரலாறுகளுடன் 12 ஜோதிர்லிங்கங்களாக நம் பூலோகத்தில் எழுந்தருளியுள்ளார். அவை:
- சோமநாத்
- ஶ்ரீ சைலம்
- மஹாகாளேஷ்வரம்
- ஓங்காரேஷ்வரம்
- பரளி வைத்தியநாதம்
- பீமசங்கரம்
- இராமேசுவரம்
- அவுண்டா நாகநாதம்
- காசி விசுவநாதம்
- த்ரயம்பகேஷ்வர்
- கேதார்நாத்
- குஷ்மேஷ்வரம்
மேலும் படிக்க : சிவனின் அருளைப் பெற்றுத்தரும் 108 நந்தீஸ்வரர் போற்றி
மகரிஷி வேதவியாசர் அருளிய ஸ்ரீசிவ மஹாபுராணத்தில் நான்காவது ஸம்ஹிதையான கோடிருத்ர ஸம்ஹிதையில் மேற்கண்ட 12 ஜோதிர்லிங்கள் பற்றிய விவரங்கள் இடம் பெறுகின்றன. இனி அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.