மறா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பிரசாதம்
விநாயகருடைய பிறந்தநாளான விநாயக சதுர்த்திக்கு பிரசாதமா பூர்ண கொழுக்கட்டை செய்வது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். சங்கடஹர சதுர்த்திக்கு சிறப்பு பிரசாதமா பிடி கொழுக்கட்டை செய்வாங்க. ஏன் பூர்ண கொழுக்கட்டை செய்யக் கூடாதா அப்படின்னு கேள்வி கேக்கறவங்களுக்கு செய்யலாம் அப்படிங்கறதுதான் பதில்.
7 ஆகஸ்ட் 2020 மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கறவளுக்கு மாலை பூஜை முடிந்து பிரசாதமா சாப்பிட்ட பிடி கொழுக்கட்டை செஞ்சுக்களாம்.
பிடி கொழுக்கட்டை இனிப்பு உப்பு என இருவகையில் செய்யலாம். இனிப்பை கோவிலுக்கு எடுத்துச் சென்று பிரசாதமாக படைப்பது வழக்கம். ஆனால் வீட்டில் பூஜை செய்து இவ்விரண்டையும் பிரசாதமாகப் படைத்து பிறகு நாம் சாப்பிடலாம்.
இனிப்பு பிடி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
அரிசி- 1 கப்
வெல்லம்- 2 கப்
தண்ணீர்- 2 கப்
தேங்காய் துருவல்- 1 கைப்பிடி
செய்யும் முறை
பச்சரிசியை மிக்ஸியில் ரவையாக பொடித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு கொதி வந்த பிறகு பொடித்த அரிசியை சேர்த்து வெந்த பாவம் வந்த பிறகு தேங்காய் துருவலும் வெல்லமும் சேர்க்கவும். சற்று ஆற வைத்து விட்டு கை சூடு தாங்கும் அளவிற்கு வந்த பின் உருட்டி இட்லி பானையில் ஆவியில் 10-15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
சூட சூட இனிப்பு பிடி கொழுக்கட்டை தயார்.
உப்பு பிடி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
அரிசி- 1 கப்
தண்ணீர்- 2 கப்
தேங்காய் துருவல்- 1 கைப்பிடி
பச்ச மிளகாய்- 2
இஞ்சி- 1 துண்டு
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்
கடுகு
செய்யும் முறை
பச்சரிசியை மிக்ஸியில் ரவையாக பொடித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் கருவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாயை துண்டாக நறுக்கி சேர்க்கவும். தண்ணீர் விட்டு கொதி வந்தபின் பொடித்த அரிசியை சேர்த்து வெந்த பின் உப்பு சேர்த்து நன்கு கிளறி ஆற வைத்து விட்டு கை சூடு தாங்கும் அளவிற்கு வந்த பின் உருட்டி இட்லி பானையில் ஆவியில் 10-15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
சூட சூட உப்பு பிடி கொழுக்கட்டை தயார்.
குறிப்புகள்
பிரசாதமாக இருந்தாலும் இரவு உணவிற்கு நல்ல சிற்றுண்டியாக அமையும். பிரசாதமாக செய்யாமல் சிற்றுண்டியாக செய்யும்பொழுது பச்சரிசிக்கு பதிலாக புழுங்கலரிசியும் சேர்த்துக் கொள்ளலாம். ஆவியில் வேக வைக்கும் உணவாக இருப்பதால் குழந்தைகளுக்கும் உகந்ததாக அமைகிறது. லேசான உணவு என்பதால் இதனை இரவில் உட்கொள்வோருக்கு அடுத்த நாள் காலை விரைந்து பசிக்க கூடும்.
சந்தோஷமாக மஹா சங்கடஹர சதுர்த்தி விழா இல்லத்திலிருந்து கொண்டாடும் சிலேட்குச்சியின் வாழ்த்துக்கள்.