மதுரை ராஜாஜி மருத்துவமனை கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதி
மதுரை மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் மத்திய ஆயுத கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நாள்தோறும் 1,500 முதல் 2,000 மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன.
இதற்கு முடிவு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவக் கல்லூரி நூலகம் அருகே நேரில் பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
நேரில் வர முடியாதவர்கள் தற்போது மருத்துவ பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மதுரையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்தன.
பரிசோதனை முடிவுகளை சாமானிய மக்கள் பெறுவதில் இருந்த சிக்கலைப் போக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை இந்த பயனுள்ள இந்த திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
ஒருவரது பரிசோதனை முடிவு வெளிவந்த பின் ஏழு நாட்கள் வலைத்தளத்தில் இருக்கும். பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான வலைத்தளம் http://www.mdmc.ac.in/mdmc/
இணையதளத்தில் பரிசோதனைக்கான மாதிரிகளை கொடுத்தவர் தனது பெயர், வயது மற்றும் தொலைபேசி எண்ணின் கடைசி ஐந்து இலக்க எண்களை பூர்த்தி செய்து முடிவுகளை பார்த்துக்கொள்ள முடியும், இவற்றை பதிவிறக்கம் செய்யக்கூடிய வசதியும் உள்ளது,
இணையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் மதுரை ராஜாஜி மருத்துவமனை புதிய ஏற்பாடாக மதுரையில் பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏற்பாடு அனைவருக்கும் ஏற்றதாகும், கொரோனா தடுப்பதற்கு மற்றும் பாதுகாப்பையும், நம்பிக்கையும் அளித்துள்ளது.