ஜல்லிக்கட்டு நடைபெற தேதிகள் மற்றும் இடங்கள் அறிவிப்பு
மதுரை மாவட்டம் ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு தொடர்பான கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஜனவரியில் தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில், மாட்டுப் பொங்கல் அன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட உள்ளன.
- மதுரை மாவட்டம் ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு தொடர்பான கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
- காலை 8 மணி தொடங்கி நான்கு மணி வரையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை அனுமதித்துள்ளனர்.
- மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்துவருகிறார்.
சென்ற ஆண்டைவிட கொரோனா தொற்றினால் 300 வீரர்களை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளன. காலை 8 மணி தொடங்கி நான்கு மணி வரையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை அனுமதித்துள்ளனர்.
தைப்பொங்கல் மூன்று நாட்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உள்ளனர். இப்போட்டிக்கான முன்னேற்பாடுகளை பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு செய்வது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்துவருகிறார்.
ஜல்லிக்கட்டு காளைகளை நிறுத்தி வைக்கப்படுவதற்காக இடங்களையும், பார்வையாளர்களுக்கான அமரும் கேலரி. இப்போட்டியில் கலந்து சிறப்பிக்க கூடிய மாடு பிடிக்கும் வீரர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளையும் ஆய்வு செய்கின்றனர்.