ஃபேசன்செய்திகள்தமிழகம்வாழ்க்கை முறை

ஊரடங்கிலும் அசத்தும் பெண் ஆடை வடிவமைப்பாளர்

பெண் தொழில் முனைவோர்களுக்கு இந்த ஊரடங்கு பெருமளவு வீழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மத்திய, மாநில அரசுகள் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் கடன் உதவிகளை வழங்க வேண்டும் என்று தற்போது கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் விஜயலட்சுமிக்கு தொழில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. மனம் தளராத விஜயலட்சுமி வீட்டிலிருந்தபடியே இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மூலம் தனது ஆடை வடிவமைப்புகளை விளம்பரப்படுத்தி உள்ளார். இதன் மூலம் கல்லூரி, மாணவிகள் மற்றும் பெண்கள் நன்மதிப்பை பெற்றுள்ள இவர். திருமண, பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு புதிய மாடல்களில் ஆடைகளை வடிவமைத்து வழங்க தொடங்கியுள்ளார்.

நம் நாடும் தனிநபர் ஒவ்வொருவரும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த நிலையில் மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி எம்பிஏ பட்டம் பெற்றிருந்தாலும் மனதிற்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அழகு கலை தொடர்பான ஆடை வடிவமைப்பு பயிற்சி பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜி ஃபேஷன்ஸ் என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஐந்து மாதங்களுக்கு மேலாக அனைத்து தரப்பு மக்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். பெரிய தொழில்கள் சிறு குறு தொழில்கள் என அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மூலம் ஆடை வடிவமைப்பு துறையில் அசத்தி வரும் பட்டதாரி விஜயலட்சுமி ஊரடங்கில் முடங்காமல் முயற்சி செய்து ஆடை வடிவமைப்பில் அசத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *