ஆஹா! மேடி அனுஷ்கா சைலன்ஸில் இணைகிறார்கள்
சைலன்ஸ்/நிஷப்தம் ட்ரெய்லர் இன்று மதியம் ஒரு மணி அளவில் அமேசன் பிரைமில் வெளியிடப்பட்டது. பட்டையைக் கிளப்பும் திரில்லர் படமாக சித்தரிக்கப் பட்டுள்ளது என்பது ட்ரெய்லரிலிருந்தே யூகிக்கப்படுகிறது.
இந்தத் திரைப்படம் பை-லிங்குவல் என்று சொல்லப்படும் ஒரே சமயத்தில் இரு மொழிகளில் உருவாக்கப்பட்டது.
நிஷப்தம்/சைலன்ஸ்
அனுஷ்கா செட்டி, மாதவன், அஞ்சலி, ஷாலினி பான்டே, சுப்பராஜூ, மைக்கேல் மேட்சன் என புதுவிதமான பட்டாளத்துடன் இந்த திரைப்படம் இருமொழிகளில் திரில்லர் படமாக இயக்கி உள்ளார் ஹேமந்த் மதுகர். கோனா வெங்கட், டி ஜி விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கோபி சுந்தர் இசையில் வெளிவர இருக்கிறது இந்த நிசப்தம்/சைலன்ஸ் திரைப்படம்.
தெலுங்கு திரையுலகில் அருந்ததி என்னும் பிரம்மாண்ட த்ரில்லரில் அனுஷ்கா பட்டையை கிளப்பியது பல வருடங்களுக்குப் பிறகும் இன்றும் திகிலூட்டும் திரைப்படமாக அமைகிறது. மற்றொரு திரில்லர் படத்தில் இவர் களமிறங்குவது பெரிய எதிர்பார்ப்பை தூண்டுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் காது கேட்க முடியாத வாய் பேச முடியாத ஓவியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அனைவரின் கனவு நாயகன் எல்லா வயதினருக்கும் சாக்லேட் பாயாக திகழும் மேடி வயலின் கலைஞராக இன்றும் என்றும் பெண்களின் மனதை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தில் காட்சியளிக்கிறார். ட்ரெய்லரில் பிரம்மாண்ட கூட்டத்திற்கு மத்தியில் பிரமாண்ட மேடையில் பிரம்மாண்டமான வயலின் வாசிக்கும் காட்சியில் மேடி செம தூள்.
அங்காடித்தெரு அஞ்சலியை சுடிதார் தாவணியில் பார்த்தவரை குட்டை பாவாடை சட்டையுடன் வெளிநாட்டு மண்ணில் போலீஸ் அதிகாரியாக பார்ப்பதில் க்லாஸாக உள்ளது. புது ரசிகர் கூட்டத்தை திரட்டப் போகிறார் என்பது தெரிகிறது. இவரின் வளர்ச்சியை காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
வெளிநாட்டில் நடக்கும் கதை தளத்தால் வெள்ளையர்களையும் வெள்ளித் திரையில் காணலாம். மைக்கேல் மேட்சன் என்னும் வெளிநாட்டவரை பிரதான காவல் அதிகாரியாக இத்திரைப்படத்தில் காணலாம்.
இன்று வெளியான ட்ரெய்லர் மிகுந்த ஆவலை தூண்டியுள்ளது. இந்தப் படம் 2 அக்டோபர் 2020 அமேசான் ப்ரைமில் இரு மொழியிலும் வெளியாகிறது. மக்களே ட்ரெய்லரை பார்த்துட்டு பத்தே நாட்கள் காத்திருக்க படத்தை என்ஜாய் செய்யலாம்.