திருப்பாவை திருவெம்பாவை 8 நாள் பாடல்!
மார்கழி எட்டாம் நாள் பனிமழையில் நீராடிச் சிவசிவ, நமோ நாரயணா நாம் வணங்கும்பொழுது நமக்கு ஏற்படும் இந்தப் பக்தியினால் கிட்டும் பெரும் ஆற்றல் நம்மை அருளோடு வாழ வைக்கும்.
திருப்பாவை – 8
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடைய பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால், ஆவாவென்று ஆராய்ந்து அருள் – ஏலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பொழுது விடிந்து விட்டது என்பதை இப்படி விளக்குகிறார்கள். விடிந்து விட்டது. நீராட எழுந்திருக்க வேண்டுமல்லவா, வானம் வெளுத்துவிட்டது. எருமை மிகவும் மந்த காணம் கொண்டு செயல்ப்படும். அத்தகைய எருமைகளே எழுந்து சென்றுவிட்டன. நீ இன்னும் தூங்குகிறாயே பெண்ணே கால் கடுக்க வைக்காதே காலை நேரம் எழுந்திரு வா. அசுரனை வாய்ப்பிளக்க வைத்த சிறுவன் வலிமையை கண்ணன் காட்டியிருந்தார். கம்சனை வதைத்த கண்ணன் பல அரக்கர்களை அழித்தார்.
அவனருள் கிடைத்தால், நம்மை குற்றமும், பாவமும் செய்ய வைக்கும் ஆசை அசுரனை, மமதை மல்லனை நாமே கொன்றுவிடலாம் என்று இந்த பாசுரத்தில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.
திருவெம்பாவை – 8
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
காலைப்பொழுது கோழிகள் கூவுகின்றன அந்தக் கோடுகளின் ஒளியானது சிவபெருமான் அழைப்பது போல் இருக்கின்றது. கோவில்களில் வெண் சங்கு முழக்கம் விண்ணைப் பிளக்கிறது. ஒப்பற்ற சிவ பெயர் அருளை நாங்கள் அனைவரும் பாடினோம். பெண்ணே உனக்குக் கேட்கவில்லையா ஏன் இப்படி விழுந்து தூங்குகிறாய்! சிவபெருமான் நாமத்தை நாங்கள் எச்சரிப்பது கேட்கவில்லையா எழுந்து ஒரு வார்த்தையாவது பேசு என்ன முழக்கம் எதற்கு எழுந்திடு பெண்ணே