மாரி பாடலுடன் கலக்கிய ரியாலிட்டி ஷோ
2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படத்தில் வரும் “மாரி தர லோக்கல்” என்ற பாடலை தனுஷ் எழுதி அனிருத் இசையில் அவரே பாடியிருந்தார்.
ஆக்ஷன் காமெடி படமாக வெற்றி பெற்ற மாரி படத்தில் முதலில் வந்த அந்த பாடல் தனுஷின் கதாபாத்திரத்தை விளக்குவதாக அமைந்திருந்தன.

இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்த மும்பையில் நடன குழுவினர் பிரமிடு உள்ளிட்ட நவீன பாணியில் நடனமாடி நடுவர்களை கவர்ந்துள்ளனர்.
தனுஷ் நடித்த மாரி படத்தின் டைட்டில் பாடல் பிரிட்டனில் நடத்தப்படும் காட் டேலண்ட் என்ற நடன ரியாலிட்டி ஷோவில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியை நடுவர்களுக்காக வீடியோ வழியாக மும்பையை சேர்ந்த நடன குழுவினர் மாரி பட பாடலுக்கு அசத்தலாக அக்ரோ பேட்டிக்ஸ் மற்றும் ஸ்டைலாக நடனமாடி கலக்கி உள்ளார்கள்.
இதுபற்றி இயக்குனர் பாலாஜி மோகன் ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். மும்பை இளைஞர்களின் நடனத்தை கில்லர் பர்ஃபாமென்ஸ் எனப் பாராட்டி இவர் இந்த பதிவை அனிருத் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு பகிர்ந்துள்ளார்.