ஆன்மிகம்ஆலோசனை

திருப்பம் தரும் திருப்புகழ் மூலம் கிளர் ஓர் – பழநி

கந்தக்கடவுளின் ஒவ்வொரு அசைவையும் தனக்குள் கிரகித்து மூச்சையும் அதில் கந்தக்கடவுள் பழநி பெருமையும் முருகர் ஆடும் திறனையும் விளக்கியுள்ளார். முருகரை வழிபடுவோர்க்கு வாழ்வில் எத்துன்பமும் இல்லை.

மூலங்கிள ரோருரு வாய்நடு
     நாலங்குல மேனடு வேரிடை
          மூள்பிங்கலை நாடியொ டாடிய …… முதல்வேர்கள்

மூணும்பிர காசம தாயொரு
     சூலம்பெற வோடிய வாயுவை
          மூலந்திகழ் தூண்வழி யேயள …… விடவோடிப்

பாலங்கிள ராறுசி காரமொ
     டாருஞ்சுட ராடுப ராபர
          பாதம்பெற ஞானச தாசிவ …… மதின்மேவிப்

பாடுந்தொனி நாதமு நூபுர
     மாடுங்கழ லோசையி லேபரி
          வாகும்படி யேயடி யேனையும் …… அருள்வாயே

சூலங்கலை மான்மழு வோர்துடி
     வேதன்தலை யோடும ராவிரி
          தோடுங்குழை சேர்பர னார்தரு …… முருகோனே

சூரன்கர மார்சிலை வாளணி
     தோளுந்தலை தூள்பட வேஅவர்
          சூளுங்கெட வேல்விடு சேவக …… மயில்வீரா

காலின்கழ லோசையு நூபுர
     வார்வெண்டைய வோசையு மேயுக
          காலங்களி னோசைய தாநட …… மிடுவோனே

கானங்கலை மான்மக ளார்தமை
     நாணங்கெட வேயணை வேள்பிர
          காசம்பழ னாபுரி மேவிய …… பெருமாளே.

மேலும் படிக்க : மகா சிவராத்திரி நாடெங்கும் பக்தி பெருக்குடன் சிறப்பு பொங்க கொண்டாடப்பட்டது.

மூச்சினை ஒருமுகப்படுத்த அதனை எவ்வாறு நாம் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விளக்கயுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *