ஆன்மிகம்ஆலோசனை

சமையலறையில் இந்த பொருட்கள் இருந்தால் லக்ஷ்மி கடாட்சம் பெருகும்

நம் இல்லத்தில் குறைவில்லாத தானியத்தைப் பெற அன்றாடம் சமைக்கும் முன்பு அன்னபூரணியை வணங்கிவிட்டு சமைக்க வேண்டும். நம் முன்னோர்கள் இதை கடைபிடித்ததால் தான் வீட்டில் தனம், தானியம் தாராளமாக இருந்தன. இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களும் இதை கடைபிடிக்க வேண்டும். அன்னபூரணி படத்தை சமையல் அறையில் வைத்தல் உசிதமானது. மேலும் சில பொருட்கள் குறையாமல் சமையலறையில் வைத்திருப்பதால் வீட்டில் உள்ள செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளன.

சமையலறையில் நிறைகுடம் தண்ணீர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் வீட்டில் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கும் பழக்கம் இருந்தது. தற்போது ஆரோ வாட்டர், பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து வைத்துள்ள தண்ணீரை பயன்படுத்துகிறோம். பித்தளை, செம்பு அல்லது மண்பானை ஏதாவது ஒரு பானையில் தண்ணீர் நிரம்பி வைத்திருத்தல் அவசியம்.

பூஜை அறையில் அன்னபூரணி சிலை சிறிதாக வாங்கி வைத்து அரிசி போட்டு வைப்பது செல்வத்தை கூட்டும். வீட்டில் கல் உப்பு ஜாடியில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும். பீங்கான் ஜாடி உப்பு வைத்து குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுத்தமாக தீரும் வரை அல்லாமல் குறையக் குறைய வாங்கி நிரப்பி வைக்க வேண்டும். குபேரனுக்குப் பிடித்த ஊறுகாய் வகைகளை விதவிதமாக செய்து வீட்டில் குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஊறுகாய் ஜாடியில் வைப்பது தான் சிறந்தது. மகாலட்சுமி கடாட்சம் பெரும் உப்பு ஊறுகாய் சேரும் போது செல்வ வளம் கிடைக்கும்.

மேலும் படிக்க : மகிழ்ச்சியாக வாழ தினமும் இதனை படியுங்கள்

உப்பிற்கு அருகில் ஊறுகாய் ஜாடியை வைக்க வேண்டும். வீட்டில் அரிசியை வைக்கும் இடத்தில் ஆழாக்கு வைக்க வேண்டும். அரிசியும், தானிய வகைகளையும் அருகில் தான் வைக்க வேண்டும். சமையலறையில் பூஜை செய்யும் இடம் இருந்தால் சமைக்கும் பொருட்களை பூஜைக்குப் பக்கத்தில் வைக்கக்கூடாது. பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில் பூஜை செய்யும் இடத்தை மூடிய படி இருக்க வேண்டும்.

மேலும் படிக்க : அமைதி அமைதி அமைதியோ அமைதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *