யாருகிட்டயும் அடங்காத வெட்டுக்கிளிகள் மீம்ஸ் உலகத்தில் மாட்டிகிச்சு
‘காப்பான்’ எனும் திரைப்படத்தில் இந்த வெட்டுக்கிளிகளின் அராஜகத்தை திரையில் பார்த்துள்ளோம். வாங்க வந்து நேராவே பாருங்க என்கிற மாதிரி உத்திரப் பிரதேசத்தை மிகவும் தாக்கியுள்ளது வெட்டுக்கிளிகள்… இதன் தாக்கத்தால் அரிசிப் பற்றாக்குறை வந்தாலும் வரலாமாம்…
வெட்டுக்கிளிகளின் அராஜகம்
Locust swarm என்று சொல்லப்படும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் விவசாய பயிர்களை தின்று நாசப் படுத்துகிறது. இதனால் உணவுப் பற்றாக்குறை நேரிடலாம்.
வெட்டுக்கிளிகள் பொதுவாக வெப்பமான இடத்தில் இனப்பெருக்கம் செய்யும். பாகிஸ்தானில் இது அதிகமாக காணலாம். இந்தியாவில் ராஜஸ்தான் வரை வரக்கூடிய இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் தற்போது உத்திரப்பிரதேசம் வரை பயணித்து அனைத்து பயிர்களையும் நாசம் செய்துள்ளது. என்னடா இது அட்டகாசம் என்றமாறி ஆட்சியாளர்கள் முழிக்கின்றனர்
இந்தக் கூட்டத்தின் எண் தொகை ஆச்சரியப்பட வைக்கிறது. 2 லட்ச வெட்டுக்கிளிகளின் கூட்டம் 150 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யக் கூடியது. தமிழ்நாட்டை அண்டாது என ஒரு ஆராய்ச்சி கூறுகிறது இது உண்மைதானா என்பதையும் நாம் வெய்ட் பண்ணிதான் பார்க்கனும்.
மாறுபட்ட நிறம்
Locust swarm attack இதில் 2 வகை வெட்டுக்கிளிகளை காணலாம். ஒன்று இவலகளைப் போன்ற பச்சை நிறம் மற்றொன்று பழுத்த இலைகளை போன்ற மஞ்சள் நிறம். இந்த நிறம் மாறுதலுக்கு பலர் செயற்கையாக உருவாக்கப்பட்ட வெட்டிக்கிளிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஒருபுறம் இருக்கையில்; அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது செரடோனின் (Serotonin) என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டர் (Neurotransmitter) இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மூளையில் இருக்கும் அணுக்களானன நியூரான்கள் இந்த செரட்டோனின் எனும் அமிலத்தை வெளிப்படுத்தும். நம் நண்பர்களை எதேர்ச்சையாக பார்ப்போமாயின் நமக்கு வரும் உற்சாகம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இந்த அமிலத்தின் தாக்கம்.
அந்த வெட்டுக்கிளிகளுக்கு நடுவே ஒவ்வொன்றுக்கும் வெளிப்படும் அந்த உணர்ச்சி, செரட்டோனின் மூலமாகவே நடைபெற அது நிறம் மாற்றமாக வெளிப்படுகிறது.
தடுப்புமுறை
வெட்டுக்கிளிகள் சத்தத்தைக் கேட்டால் பயந்து ஓடும் என ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. விவசாயிகள் தட்டையும் கரண்டியும் வைத்து சத்தம் போடுவதில் எவ்வளவுதான் விரட்ட முடியும்???
தற்போது உத்தரப்பிரதேசத்தில் லாரி லாரியாக மருந்து அடித்து விரட்டுகின்றனர்.
மீம்ஸ்
உணவு வட்டத்தில் (Food Cycle) வெட்டுக்கிளிகளை சிட்டுக்குருவிகள் உணவாக உட் கொள்ளக் கூடும் என்னும் கருத்தை அழகாக 2.0 படக்காட்சிக் கொண்டு அசத்தியுள்ளனர்.
இது ஓர் எச்சரிக்கையா அல்லது பேரழிவின் ஆரம்பமா?
வாங்க நாட்டை காப்பாத்துவோம்…