தடாலடியாக இறங்கிய சூரியாவின் அடுத்த கட்டம்
காதல் வாலிபனாக சினிமா துறையில் களமிறங்கி பொறுப்புள்ள கணவனாவும், படங்களில் சக்கைப் போடு போட்டு அடுத்த கட்டமாக போலீஸ் சிங்கமாக கர்ஜித்த சூரியாவையும் இந்த கொரோனா லாக்டௌன் விட்டு வைக்கவில்லை.
டிசம்பர் மாதத்தில் உலகில் களமிறங்கிய கொரனா இந்தியாவில் மார்ச் மாதத்தில் வீரியம் அடைய அனைவரும் வீட்டினுள்ளேயே தனிமைப்படுத்தப் பட்டனர். எல்லா துறையும் வேலைகளும் நின்று போக நம் வீடு எனும் நான்கு சுவற்றுக்குள் நம் வாழ்க்கை அடங்கியது.
கணினி வேலை செய்பவர்களுக்கு மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று சலுகை கொடுத்து வேலை வாங்கி வந்தனர். வெளியில் தான் வேலை செய்ய வேண்டும் என்று பல துறைகள் இருக்கும் நிலையில் அவர்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது.
பெரும்பாலான பெண்களும் தற்போது அலுவலகம் செல்பவராக உள்ளதால் அவர்களுக்கும் வீட்டிலிருந்து என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாமல் திண்டாடினர். மார்ச் முதல் மே மாதம் வரை நாமும் நம் வீட்டிலிருந்து வாழலாம் என்று இயற்கை நமக்குக் கற்றுக் கொடுத்து விட்டது.
வீட்டில் தினமும் ஒருவேளையாவது சமைத்துக் கொண்டிருந்த பெண்மணிகள் ஸ்விக்கி சோமாட்டோ போன்றவை வந்த பிறகு அதையும் நிறுத்தி விட்டதாக பல குற்றச்சாட்டுகள் வந்து குவிந்தன. ஆனால் இந்த மூன்று மாதகாலம் அனைவரையும் சமையலில் ஈடு படுத்தி விட்டது.
சில்லுனு ஒரு காதல் படத்தில் கௌதம் ஆக நடித்த சூர்யா. அந்த படத்தில் சிறு சிறு சமையல் வேலைகளை செய்ய பின் சமீப காலத்தில் வந்த பசங்க 2 படத்தில் முழுமையான கணவனாக அப்பாவாக நடித்ததை தற்போது நிஜ வாழ்க்கையில் ஈடுபடுத்தி பிரமாதமாகச் அமைத்துள்ளார்.
‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்’
சிங்கமாக கர்ஜித்த சூர்யா வசனம் அப்பொழுது வைரலாக தற்போது டன் கணக்காகச் சமைப்பது வைரலாகச் செல்கிறது. ஜோவின் கணவராக இரு குழந்தைகளுக்குத் தந்தையாகச் சமையலறையில் பட்டையைக் கிளப்பும் சூர்யாவின் புது அவதாரமும் பலரால் பாலோ செய்யப்படப்போகிறதா! மனுச என்னமா பொறுப்பா இருக்கார்னு எல்லாரும் பொறாமைப்படும் அளவிற்கு லாக்டவுன் நேரத்தில் சமையலில் இறங்கி கலக்க ஆரம்பித்துவிட்டார்.
கொரோனாவால் பலர் பாதிப்பு அடைந்து கொண்டிருக்கும் அவல நிலை இருப்பினும் பல நல்ல விஷயங்களும் நம்மைச் சுற்றி நிகழ்வதை நாம் கண்கூடாகக் காணலாம்.