பொது முடக்கம் நீட்டிப்பு அக்டோபர் 31 வரை தொடரும் ஐந்தாம் கட்ட தளர்வுகள்
தமிழக அரசு அக்டோபர் 31ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொது முடக்கம் அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளும், தலைவர்களுடனும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஐந்தாம் கட்ட தளர்வுகள்
நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைப்படி எந்த விதமான தொடர்புகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். மாநிலம் முழுவதும் 144 கீழ் பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட கூடாது என்ற உத்தரவு தொடர்ந்து இருக்கும்.
நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் 100 வெளிமாநில விமானங்கள் தரையிறங்க அனுமதி சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை இதுதவிர விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.
தளர்வுகள் அக்டோபர் 31ஆம் தேதி
அரசு மற்றும் அரசு சார் பயிற்சி நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுய விருப்பத்தின் பேரில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு.
தேனீர் கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி. இரவு 10 மணி வரை பார்சல் அனுமதி. திரைப்பட படப்பிடிப்புக்கு 100 பேர் வரை பங்கேற்க அனுமதி. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.