இந்த 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு..!! மாநில தேர்தல் ஆணையம் அதிரடி..!!
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
நேற்று நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் 61 சதவீத வாக்குகள் பதிவானது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு 50 சதவீதத்தை கூட தொடவில்லை.
ஆங்காங்கு சிறு அசம்பாவிதங்கள் மற்றும் மோசடிகள் நடந்தாலும், பெரிய அளவில் எந்த வன்முறையும் இல்லாமல் தேர்தல் அமைதியாகவே நடந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.
மாநிலம் முழுவதும் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மட்டும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள்
- சென்னை வண்ணாரப்பேட்டை 179வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174
- சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059
- அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-ம் வார்டு வாக்குச்சாவடிகள் 16 எம்,15 டபிஎல்யூ
- மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17
- திருவண்ணாமலை நகராட்சி 25ம் வார்டு வாக்குச்சாவடிகள் 57 எம், 57 டபிஎல்யூ
மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளில், வாக்காளரின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.