சினிமாசெய்திகள்

வாழு வாழ விடு; காஜல் அகர்வால் அட்வைஸ்

உடல் தோற்றம் குறித்த கிண்டலடித்தவர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் பதிலடிக் கொடுக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் முன்னனி நடிகையாக காஜல் அகர்வால் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து சமீபத்தில் போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டிருந்தார், அதை பார்த்த சிலர் உடலை வைத்து கேலி செய்து வந்தனர். இதனைதொடர்ந்து அவர் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் மிக முக்கியமாக எனது பணியிடத்தில் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை நான் பார்க்கின்றேன்.”
“கர்ப்பம் தரிக்கும் போது கண்டிப்பாக உடலில் சில மாற்றங்கள் வரும். அவரவர் உடலில் மாற்றங்களை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். வாழுங்கள் வாழ விடுங்கள். அனைவருக்கும் அன்புகள்” என அட்வைஸ் கூறியுள்ளார்

மேலும் படிக்க : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்க…. சுந்தர பாண்டியன் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *