விளையாட்டு

லிட்டில் மாஸ்டர் கவாஸ்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அட்ரா சக்க சுனில் மனோகர் கவாஸ்கரின் பிறந்தநாள்.

வயதின் அடிப்படையில் அதிகரிக்கும் வரிசையில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் பிறந்த நாளாக வருகிறது. மகேந்திர சிங் தோனி, பின்பு சவுரவ் கங்குலி, இன்று சுனில் கவாஸ்கர்.

கவாஸ்கர்

10 ஜூலை 1949 பிறந்த மராட்டிய கிரிக்கெட் வீரர் சுனில் மனோகர் கவாஸ்கர். 90 கிட்ஸோட பெரும்பாலான தந்தைமார்களோட உத்வேகம் நாயகனாக திகழ்ந்தவர். என்னடா இப்படி சொல்றேன் பாத்தீங்கன்னா இவரோட கிரிக்கெட் கேரியர் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு.

90ஸ் கிட்ஸ்க்கு சச்சின் டெண்டுல்கர் களத்தில் இறங்கும்போது வர சந்தோஷம் உற்சாகம் கொஞ்சம் கூட குறையாமல் அவங்களோட தந்தைமார்களுக்கு சுனில் கவாஸ்கர் இறங்கும்போதும் இருக்கும். சிறந்த பேட்ஸ்மேன் இவரோட சதம் அடிக்கும் பட்டியல் பார்த்தீங்கன்னா ஆச்சரியப்பட்டுப் போவீங்க.

உண்மையான கிரிக்கெட்டை தெரிஞ்சுக்கணும்னா டெஸ்ட் மேட்ச் பாக்கணும். நமக்கு டி20யே 5 மணி நேரம் ஆகுதுன்னு நினைக்கிறவங்க நிறைய பேர் இருக்கோம். பலபேர் ஹைலைட்ஸ் மட்டும் பார்க்கிறவர்கள் இருக்காங்க. இதுல மூணுலேர்ந்து அஞ்சு நாள் டெஸ்ட் மேட்ச் பார்க்கிற அளவுக்கு பொறுமை பல பேர்கிட்ட இல்லை.

சுனில் கவாஸ்கர் டெஸ்ட் மேட்ச் நாயகனாக திகழ்ந்தாரு. பல போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் சுனில் கவாஸ்கர் ஆனால் கேப்டன்சி இவருக்கு ஒத்துவரவில்லை. இவர் கேப்டனா இருந்த பல மேட்சுகள் ட்ராலையே முடிஞ்சிருக்கு. என்னதான் இவரு பல சதம் அடித்தாலும் மேட்ச் இந்தியாவோட கையில இல்லாமல் இருந்தது. ஆனால் பாகிஸ்தானுடன் ஆடிய போட்டியில் 2-0 வெற்றி பெற்றது இந்தியா.

1970 லிருந்து 1980 வரைக்கும் இவருடைய கிரிக்கெட் பயணம் பெருசா பேசப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் இவரோட பேட்டிங்கும் சிலிப்ல நின்னு இவர் புடிக்கும் கேட்சும். ஒரு விக்கெட் கீப்பருக்கு இணையா இவரோட சில்ப்ல ஃபீல்டிங் பயணம் இருக்கு. நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்லிப்பில் கேட்ச் செய்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர்.

சுனில் கவாஸ்கர் பௌலராகவும் தன் கிரிக்கெட் பயணத்தை பயணிக்க அந்தப் பயணத்தில் அவர் ஒரே ஒரு விக்கெட் தான் எடுத்திருக்காரு. யாரோட விகடனும் பார்த்தீங்கன்னா ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஸாஹிர் அப்பாஸ்.

வரலாற்று பதிவுகள்

கிரிக்கெட் வரலாற்றில் பலவற்றில் முதல் சாதனையாளர் சுனில் கவாஸ்கர். 10000 ரன்களை குவித்த முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர். 34 டெஸ்ட் மேட்ச்களில் சதம் அடித்து மற்றொரு சாதனையை முறியடித்து சாதனை புரிந்தவர். இவரின் சாதனை சச்சின் டெண்டுல்கரால் 2005இல் முறியடிக்கப்பட்டது.

இந்தியாவிற்கும் மேற்கு இந்தியர்களுக்கும் நடந்த டெஸ்ட் போட்டியில் இவரின் கிரிக்கெட் பயணத்தில் முதல் முறையாக களமிறங்கிய டெஸ்ட் தொடரில் 774 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.

பல விருதுகளை பெற்ற நாயகன். பத்மபூஷன் விருது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர்

கிரிக்கெட் வீரராக தன் வாழ்க்கை பயணத்தை வாழ்ந்த சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டைப் பற்றி நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் இவருடைய சுய சரித்திரமும் ஒன்று.

திரைப்படம்

இவருடைய தாய் மொழியான மராட்டியில் ஒரு படமும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டும் வாழ்க்கையும் இணைப்பது போல் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

கபில்தேவ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று சுனில் கவாஸ்கர் தொடக்க பேட்ஸ்மேனாக ஆடி உலகக் கோப்பையை 1983 இந்திய அணி கைப்பற்றியது. இதனையொட்டி 83 என்ற படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

மீண்டும் ஒரு முறை பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவாஸ்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *