ஆன்மிகம்ஆலோசனை

வாழ்வில் சங்கடங்களை போக்கும் சங்கடஹர சதுர்த்தி.!

ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி அடுத்து வருகின்ற சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு விசேஷமானது. வருகின்ற 9/06/2020 செவ்வாய்க்கிழமை. வைகாசி மாதத்தில் வருகின்றது. இந்த சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு உகந்தது. சங்கடஹர சதுர்த்தி என்பது நம் வாழ்வில் ஏற்படக்கூடிய சங்கடங்களை போக்குவதற்காகவே இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ஆவணி மாதத்தில் வருகின்ற விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற சங்கடஹர சதுர்த்திக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது.

எல்லா சங்கடகரசதுர்த்தி விரதம் இருக்க முடியாதவர்கள் ஆவணி மாதத்தில் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் பிறந்த நாள் ஆவணி மாதத்தில் வரும் இந்த நாளிலாவது விரதம் இருந்து விநாயகரை வழிபடலாம்.

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி காலை எழுந்த உடன் குளித்து விட்டு சூரிய உதயமாகும் நேரத்தில் இந்த விரதத்தை தொடங்க வேண்டும். காலை ஒரு நேரம் மட்டுமாவது விநாயகருக்காக இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அன்று இரவு வீட்டில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜை நடைபெறும்.

அபிஷேகத்திற்கு தேவையான உங்களால் முடிந்த அபிஷேக சாமான்களை உங்கள் சக்திக்கு ஏற்ப வாங்கிக் கொடுக்கலாம். இன்றைய நாள் விரதம் இருப்பவர்கள் இதை செய்து வருவதால் விநாயகரின் அருளை பரிபூரணமாக பெற்று வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீக்கப் பெற்று, சனி தோஷங்களும் நீங்கும்.

சனிப்பெயர்ச்சி நடைபெறுபவர்கள் இந்த விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதோடு சனிப்பெயர்ச்சியின் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். இன்றைய சூழலில் கொரனாவினால் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே விரதமிருந்து அன்று காலையிலும், மாலையிலும், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, அவுள், பொரி, பொட்டுக் கடலை, கரும்பு சக்கரை, தேங்காய் பழம் தாம்பூலம், போன்ற பிரசாதங்களை படைத்து விநாயகர் அகவல் பாடி வீட்டிலேயே மிகச்சிறப்பாக பூஜை செய்வதுடன் இந்த விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

சங்கடஹர சதுர்த்தி அன்று இரவு 6.26 pm முதல் 6.45 pm மணிக்குள் பிறை தெரியும். இதை தரிசனம் செய்வதால் நமது சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். இவ்வாறு இந்த விரதத்தை மேற்கொண்டு விநாயகப் பெருமானின் அருளை பெற்று நலமுடன் வாழ்வோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *