செய்திகள்தமிழகம்தேசியம்வாழ்க்கை முறைவாழ்வியல்

துன்பங்கள் நிறைந்த வாழ்வில் ‘இக்கணத்தில் வாழு’

‘இக்கணத்தில் வாழு’ எனும் மந்திரச் சொல்லின் மகத்துவம். துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு இன்பமாக வாழ வேண்டும். நேபாள நாட்டின் கபிலவஸ்து அரசன் சுத்தாதனன் மாயாவதி இருவருக்கும் கிமு.563ல் (சித்தார்த்தன்) கௌதமன் மகனாக பிறந்தார். இவர் பிறந்த உடனே அரசனாக அல்லது ஆன்மீக குருவாக உலகையே ஆட்சி புரிவார் என்ற எதிர்காலத்தை கணித்து விட்டனர்.

  • இன்றைய பொழுதில் இக்கணத்தில் வாழுங்கள்!
  • ‘இக்கணத்தில் வாழு’ எனும் மந்திரச் சொல்லின் மகத்துவம்
  • துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு இன்பமாக வாழ வேண்டும்.

அகக்கண்களைத் திறந்த கௌதமன்

தன் மகன் பேரரசனாக வேண்டுமென்பதற்காக அரண்மனைக்கு உள்ளேயே எல்லா கலைகளையும் கற்றுக் கொடுத்தவர். 16 வயதிலேயே திருமணமும் முடித்து வைத்தார்கள். இன்பம் அனுபவித்த சித்தார்த்தனுக்கு ஒரே ஒரு நாள் கிடைத்த வெளி உலக தரிசனம் அகக்கண்களைத் திறந்து விட்டன. அரண்மனை பதவி, செல்வாக்கு, புகழ், உணவு, உறக்கம், மனைவி, மகன், பணியாட்கள் என்று அனைத்தையும் உதறித் தள்ளி வெளியேறினான்.

ஆசையே துன்பத்துக்குக் காரணம்

சித்தார்த்தன்(கௌதமன்) 35 வயதில் 55 சீடர்களுக்கு மட்டும் தான் கண்டுணர்ந்த உண்மைகளை சாரநாத்மான் பூங்காவில் அறிவித்தார். புத்தர் “மனித வாழ்வு என்பது இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது. ஆசையே துன்பத்துக்குக் காரணம். இன்பமாக இருக்க வேண்டுமானால் சரியான சிந்தனை, சரியான புரிதல், சரியான பேச்சு, சரியான நடவடிக்கை, சரியான வாழ்வுமுறை, சரியான முயற்சி, சரியான பராமரிப்பு மற்றும் சரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

இக்கணத்தில் வாழு

மனிதர்கள் நேற்றைய பயத்தினால் நாளைய வாழ்வை எண்ணி நடுங்குகிறார்கள். நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது. நாளை நடப்பதை தடுக்க முடியாது. இன்றைய பொழுதில் இக்கணத்தில் வாழுங்கள்! இதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு!” என்று கூறியவர் புத்த பெருமான்.

எண்பதாவது வயதில்

இவர் தனது எண்பதாவது வயதில் இரும்பு கொல்லன் ஒருவன் ஆசையோடு கொடுத்த காளான் உணவு சாப்பிட்டான். இதை உடம்பு ஏற்கவில்லை. உயிர் பிரியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்ட புத்தர். தம் பிரதம சீடர் ஆனந்தனை அழைத்து மரத்தின் கீழே படுக்க சொல்லி, நீட்டி நிமிர்ந்து படுத்து ஆனந்தா இப்போது நான் மரணத்தில் வாழப் போகிறேன் என்று புன்னகையோடு சொல்லிவிட்டு அமைதியாக உயிர் துறந்தவர்.

மந்திரச் சொல்லின் மகத்துவம்

வாழ்வின் எல்லாத் துன்பங்களையும் தீர்த்து புது வழி காட்டும் அவரது ‘இக்கணத்தில் வாழு’ எனும் மந்திரச் சொல்லின் மகத்துவம் வாழ்வின் ஒளிவிளக்காக மனிதர்களுக்கு காலமெல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.

யோக மந்திர முறை

துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு இன்பமாக வாழ வேண்டும். இன்பமாக வாழ வேண்டும் என்பதற்கான வழிதேடி அரண்மனையை விட்டு வெளியேறிய போது அவருக்கு வயது 29. முதலில் யோக மந்திர முறைகளை முழுமூச்சுடன் கற்று, தேடிப்பார்த்தால் தேடிய விடை கிடைக்கவில்லை.

அடுத்ததாக உணவு, உறக்கம், ஓய்வு என எல்லாவற்றையும் துறந்து உடலை வருத்தி தீவிர தியானத்தில் ஆழ்ந்தான். கிட்டத்தட்ட மரணத்தின் வாசலைத் அப்போது தான் தன் தேடலுக்கான விடை தியானத்திலும் இல்லை என கண்டுகொண்டான். ஆறு வருடகால தேடல் வீணாகி போனது என்ற எண்ணத்தில் இருந்தான்.

தேடலுக்கான விடை

பணிப்பெண் பால் சோறு கொண்டு வர மிக நீண்ட நாட்கள் கழித்து உணவை அனுபவித்து சாப்பிட்ட போது, சித்தாத்தன் மனதில் ஒரு மின்னல் மின்னியது. தன் தேடலுக்கான விடை கிடைத்தது போல இருந்தது. உடனே அரண்மனையை விட்டு கிளம்பிப் போய் போதி மரத்தடியில் அமர்ந்தான்.

இத்தனை நாட்களாக வெளியில் தேடிக் கொண்டு இருந்த விடையை தனக்குள் தேடத் தொடங்கினான். 49 நாட்கள் கடந்து ஒரு பவுர்ணமி தினத்தில் தேடலுக்கு விடை கிடைத்தது. மனிதகுலம் முழுவதும் இன்பம் தரக்கூடிய மந்திரச்சொல் ‘இக்கணத்தில் வாழு’ என்பதாக உதித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *