வலியிலும் வயிறு குழுங்க சிரிக்கச் செய்த சார்லி
உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். வறுமையில் பிறந்து வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞன். ஆனால் சார்லி வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. சார்லி பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் தழுவின.
- இவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை.
- உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞன்.
- உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்.
லண்டனில் சார்லி
சார்லி சாப்ளின் லண்டனில் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த ஒரு வயதிலேயே பெற்றோர்கள் சண்டையினால் பிரிந்து விட்டனர். இவர் பேசத் தொடங்கும் முன்பு தன் தாயுடன் மேடையில் சேர்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயது சிறுவனின் பாட்டுக்கு கிடைத்த அமோக வரவேற்ப்பு, தனது ஏழாம் வயதில் பறிபோனது. காரணம் தன் தாயார் மனநிலை பாதிப்பு.
மேடை நாடகங்களில் சார்லி
தன் குடும்பத்தை காப்பாற்ற மருத்துவமனை, தொழிற்சாலை, சலூன் என்று எல்லா இடங்களிலும் வேலை பார்த்தார். சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பிறகு தந்தையும் இறந்து விட்டார். குறும் படங்களில் நடிக்க நாடக குழுவினருடன் 1910-ஆம் ஆண்டு அமெரிக்கா போன இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
சார்லி குடும்ப வாழ்வு
இவரது முக்கிய கேரக்டரான தொப்பி, வளைந்த கால்கள், பேகி பேண்ட், பாப்புலர் ஆனது. ‘தி கிட்’ படத்தில் தொடங்கிய வரவேற்பு ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தன. இவருக்கு இந்த கால கட்டத்தில் குடும்ப வாழ்வு பாடாய் படுத்தின. திருமணம் 1918ல் நடந்து இரண்டு வருடம் நீடித்தது. சாப்ளினுக்கு சோகத்தை மட்டுமே கொடுத்தன. இதற்குப் பின் நடந்த இரண்டு திருமணங்களும்.
ஒரு கம்யூனிஸ்டு தீவிரவாதி என்று அமெரிக்க அரசு 1945 ஆம் ஆண்டு சாப்ளின் மீது குற்றம் சாட்டியது. அப்போது இவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால் வேறு வழியின்றி 1952 சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் பூண்டார். உலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர் விருது பெற சாப்ளினை 1972 இல் அமெரிக்க அரசு அழைத்தது.
சார்லி ரகசியம்
காலச் சக்கரம் சுழல பரிசினை ஏற்றுக் கொண்டாலும் அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி மீண்டும் சுவிட்சர்லாந்து கிளம்பினார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று, “வாழ்நாள் முழுவதும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?” என்று கேட்டார்கள். சிரித்துக் கொண்டே சாப்ளின் “இந்த நிலை மாறி விடும், துன்பமாக இருந்தாலும் சரி, இன்பமாக இருந்தாலும் சரி… மாறி விடும்! இந்த கணத்திலும் கூட!”, என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை என்றார்.