அரசியல் ராஜதந்திரி சாணக்கியர்
ராஜதந்திரம் என்ற சொல்லாடல் பொதுவாக பெறும் புத்தி வானால் செய்யப்படும் காரியங்கள் குறிக்கப்படுகின்றன. ராஜதந்திரம் என்பது எப்படி இருக்க வேண்டும் அந்த ராஜதந்திரத்தின் வித்தையை சரியாக தொகுத்து வழங்கிய மிகச்சிறந்த வல்லுனரான சாணக்கியர் அவர்களின் வாழ்வை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
குழந்தை சாணக்கியர்
சாணக்கியர் சிறு வயது முதல் மிகச்சிறந்த ஞானியாக கற்றலில் தேர்ந்தவராக இருந்தார். குழந்தை பருவத்திலேயே ரிக் வேதம், யசூர் வேதம் சாம வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றை முழுமையாக படித்து அவை குறித்த ஆய்வுகள் செய்து விளக்கங்களையும் கொடுத்திருக்கின்றார். அப்படிப்பட்ட ஞானியான சாணக்கியர் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. சாணக்கியர் மிகுந்த பார்வைக்கு பலவானாக இல்லை ஆனால் அவருடைய புத்தி ஆயிரம் கத்திகளை விட கூர்மையாக இருந்தது. அவரது வரலாற்றை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : டி.என்.பி.எஸ்.சி தேர்வு கணித கேள்விக்கான விடைத் தொகுப்பு!
படிப்பில் கில்லி அரசியலில் ஆர்வம்
சாணக்கியர் சிறுவயது முதல் கவனமுடன் படிப்பொன்றை முழுமூச்சுடன் கற்றார் விடுவதற்கு முன் எழுந்து முழுமையான தனது பணிகளை செய்து பூஜை புனஸ்காரம் என்று அனைத்தும் முடித்து பள்ளிக்குச் செல்லும் வழக்கமாக இருந்தார் சாணக்கியர் ஒரு ஆசிரியரின் மகன் என்ற போதிலும் குருவிற்கு தக்க மரியாதை சாணக்கியர் வழங்கினார் அதி புத்திசாலியாக இருப்பது சாணக்கியர் பலம் என்று சொல்லலாம் சாணக்கியர் கலைகள் அனைத்திலும் தேர்ந்தவராக இருந்தார்.
பெற்றோர்களுக்கு சாணக்கியர் பாடம்
நாம் சிறு பிள்ளகளுக்கு கவனிக்கும் ஆற்றல், எதிலும் ஆர்வம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் நலனுக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுப்பதுபோல் குழந்தைகளை வித்தகர்களாக நல்ல புத்திசாலியாக வளர்க்க வேண்டும். நாம் சார்ந்த துறையில் நாம் வல்லவராக இருப்பதுபோல் பிள்ளைகள் சிறுவயது முதல் கற்றல், கலைகளில் வல்லவராக இருத்தல் ஆகியவற்றில் தேர்ந்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க : நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு ரிவிசன் செய்யுங்க!